பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பெரிய புராண விளக்கம்-.ே

விட்டு அகன்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அரும்பு களைப் பெற்ற கிளைகளைக் கொண்ட குளிர்ச்சியையுடைய சுரபுன்னை மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலையின் வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடையும் சமயத்தில் . நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டருளும்’ அந்தத் தலத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச் ஆரம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாரை, அடியேன் தினையளவு பொழுதேனும் மறந்து விட்டு உயிர் பிழைத்து இருப்பேனோ?' என்ற கருத்தை வைத்து அந்த நாயனார் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி விட்டுத் தில்லையாகிய சிதம்பரத்திற்கு. எழுந்தருளி அடைந்தார். பாடல் வருமாறு: . மனைப்படப்பிற் கடற் கொழுந்து

வளைசொரியும் கழிப்பாலை மருங்குநீங்கி நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலுடு

வழிக்கொண்டு கண்ணும் போதில் நினைப்பவர்தம் மனம்கோயில் கொண்டருளும்

அம்பலத்து கிருத்தனாரைத் தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ ?

எனப்பாடித் தில்லை சார்ந்தார். ' மனை - திருமாளிகைகளினுடைய ஒருமை. பன்மை மயக்கம். ப்:சந்தி. படப்பில்-பின்புறத்தில் உள்ள தோட்டங்: களில்; ஒருமை பன்மை மயக்கம். கடல்-சமுத்திரத்தில் வீசும். கொழுந்து-அலைகள்; ஒருமை பன்மை மயக்கம்.வளை -சங்குகளைக் கொண்டு வந்து; ஒருமை பன்மை மயக்கம். சொரியும் - கரையில் பொழியும். கழிப்பாலை-திருக்கழிப் பாலையினுடைய மருங்கு-பக்கத்தை. நீங்கி-விட்டுஅகவறு. தனை-அரும்புகளைப் பெற்ற ஒருமை பன்மை, மயக்கம். ச்:சந்தி. சினை-கிளைகளைக் கொண்ட: ஒரும்ை பன்மை தயக்கம். குளிர்-குளிர்ந்த நிழலைத் தரும், ஞாழல்-சு