பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 29s.

புன்னைமரங்கள் வளர்ந்துநிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். பொழிலுTடு-பூஞ்சோலையின் வழியாக. வழிக் கொண்டுநடந்து சென்று. நண்ணும்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் சிதம்பரத்தை அடையும். போதில்-சமயத்தில். நினைப்பவர் தம்-தம்மை தியானிப்பவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. மனம்-திருவுள்ளங்களை ஒருமை பன்மை மயக்கம். கோயில்-ஆலயங்களாக; ஒருமை பன்மை ம ய க் க ம், கொண்டருளும்-ஏற்றுக் கொண்டருளும். அம்பலத்து-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில், நிருத்தனாரை-திருநடனம் புரிந்தரு ஆளும் நடராஜப் பெருமானாரை, த்:சந்தி. தினைத்தனை. தினையளவு. ஆம்-ஆகும். பொழுது-பொழுதும். மறந்துமறந்து விட்டு. உய்வனோ-அடியேன் உயிர் பிழைத்து இருப்பேனோ. என-என்ற கருத்தைவைத்து: இடைக்குறை. பாடி-ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளி. த்:சந்தி. தில்லை-தில்லையாகிய சிதம்பரத்திற்கு. சார்ந்தார்

எழுந்தருளி அடைந்தார். -

இந்தப் பாடலிற் குறிப்பிட்ட திருக்குறுந்தொகை வரு மாறு:

  • பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன் அனைத்து வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழுதும்மறந் துய்வனோ." அந்த நாயனார் கொல்லிப் பண்ணில் பாடியருளிய ஒரு. திரு நேரிசை வருமாறு: - . . . . .”

  • ஒதினார் வேதம் வாயால்

ஒளிநிலா எறிக்கும் சென்னிப் பூதனார் பூதம் சூழப்

புலியுரி அதள னார்தாம் நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம் பலத்தே