பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பெரிய புராண விளக்கம்-6

கடை-இறுதி. யுகத்தில் யுகமாகிய கலியுகத்தில், ஆழி யின் மேல்-சமுத்திரத்தின் மேல். மிதந்த-ஆழாமல் மிதந்து கொண்டிருந்த திரு.அழகிய செல்வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். க்:சந்தி. கழுமலத்தில்-கழுமலமாகிய கோழியில். இருந்த-திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருந்த.செம்-சிவப்பாக இருக்கும்.கண்-கண்களைக் கொண்ட ஒருமை பன்மைமயக்கம். விடை-இடப வாகனத்தை உகைத் தார்-ஒட்டுபவராகிய பிரமபுரீசர். திருவருளால்-வழங்கிய திருவருளால். வெற்பரையன்-இமாசல அரசனுடைய புதல் வியும். பாவை-பொம்மையைப் போன்றவளுமாகிய திரு நிலை நாயகி. திரு-அழகிய முலை-தன்னுடைய கொங்கை களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பாலோடும்ஒரு பொற் கிண்ணத்தில் கறந்து வழங்கியருளிய பாலு டனும். அடைய-இந்த நாடு முழுவதும். நிறை-நிறைந் திருக்கும். சிவம்-சைவ சமயம். பெருக-பெருகி வளருமாறு. வளர்-வளரும். ஞானம்-சிவஞானத்தை. குழைத்து-அந்தப் பரிவோடு குழைத்து. ஊட்ட-குடிக்கச் செய்தருளிய. அமுது செய்த-அந்தப் பாலைத் திருவமுது செய்தருளிய. உடையஅடியேன்களை ஆட்களாக உடைய; இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. மறைவேதியராகிய, திணை மயக்கம். ப்:சந்தி. பிள்ளையார்சிறுவராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். திரு வார்த்தை - திருவாய் மலர்ந்தருளிச் செய்த அழகிய வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். அடியார்கள். பிரமபுரீசருடைய அடியவர்கள். உரைப்ப-கூற. க்:சந்தி. கேட்டார்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டருளி னார். - -

பிறகு வரும் 178-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தை விழுங்கியவராகிய பிரமபுரீசரை