பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 297

மதியிலா அரக்கன் ஓடி

மாமலை எடுக்க நோக்கி நெதியன்தோள் நெரிய ஊன்றி

நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியம்தோய் தில்லை தன்னுள்

மல்குசிற் றம்ப லத்தே அதிசயம் பொவிய நின்று - அனலெரி ஆடு மாறே. " பிறகு உள்ள 177-ஆம் கவியின் கருத்து வருமாறு: இறுதி யுகமாகிய கலியுகத்தில் சமுத்திரத்தின் மேல் ஆழாமல் மிதந்திருந்த அழகிய கழுமலமாகிய சீகாழியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த சிவந்த கண் களைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய பிரம புரீசர் வழங்கிய திருவருளினால் இமயமலை அரசனுடைய புதல்வியும், பொம்மையைப் போன்றவளுமாகிய திருநிலை நாயகி ஒரு பொற்கிண்ணத்தில் கறந்து வழங்கியருளிய அழகிய கொங்கைகளில் சுரந்த பாலுடனும் முழுவதும் நிரம்பியுள்ள சைவ சமயம் பெருகுமாறு வளரும் சிவ ஞானத்தைக் குழைத்துக் குடிக்கச் செய்தருளிய பாலை திருவ முது செய்தருளிய அடியேங்களை ஆட்களாக உடைய வேதியராகிய சிறுவர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தஅழகிய் வார்த்தைகளை அடியவர்கள் தம்மிடம் கூற அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் கேட்டருளினார். பாடல் வருமாறு:

  • கடை யுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்

கழுமலத்தில் இருந்த செங்கண் விடை யுகைத்தார் திருவருளால் வெற்பரையன்

பாவைதிரு முலைப்பா லோடும் அடையநிறை சிவம்பெருக வளர் ஞானம்

குழைத்துட்ட அமுது செய்த உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை

அடியார்கள் உரைப்பக் கேட்டார். '