பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 பெரிய புராண விளக்கம்-6.

தத்தைப் போன்ற பாலை. உண்டபோதே-குடித்த சமயத்தி லேயே. ஏழிசை- ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களைக் கொண்ட இசைப் பாடல்களாகிய, வண்சொற்சுவை பொருட்சுவை ஆகிய வளப்பத்தைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலை-மாலை யாகிய ஒரு திருப்பதிகத்தை. இவன் எம்மான்-இந்தப் பிரம. புரீசன் அடியேங்களுடைய தலைவன். என-என்று. க்:சந்தி. காட்டி - சுட்டிக் காட்டி. இயம்ப-பாடியருள. வல்லவல்லமையைப் பெற்ற. காழி-சீகாழியில்.வரும்-திருவவதாரம் செய்தருளும், பெரும்-பெருமையையும். தகை- தகையையும் பெற்ற திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய சீர்சீர்த்தியை. கேட்டலும்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டவுடன். ஏ: அசை நிலை. அதிசயமாம்-வியப்பாக இருக் கும்.காதல்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தரிசிக்கும் விருப்பம். கூர-தம்முடைய திருவுள்ளத்தில் மிகுதி யாக எழ. வாழி: அசைநிலை. அவர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய, மணி-மணிகளை அடக் கிய, க்:சந்தி. கழல்கள்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடி களை ஆகுபெயர். வணங்குதற்கு-பணியும் பொருட்டு. மனத்து-தம்முடைய திருவுள்ளத்தில். எழுந்த-பொங்கி எழுந்த விருப்பு-விருப்பம். வாய்ப்ப-வாய்ப்பாக அமைய. இந்தப் பாடலில் குறிப்பிட்ட பாசுரம் வருமாறு:

தோடுடைய செவியன்விடை ஏறிஓர்

துவெண் மதி சூடிக் - காடுடைய கடலைப் பொடியூசிஎன்

உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமா புரம்மேவிய பெம்மான் இவன்அன்றே.'