பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 30E

.*.

பிறகு வரும் 179-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்க வேண்டுமென்ற விருப்பம் உண் உான அந்தச் சமயத்திலேயே சிதம்பரத்தில் உள்ள ஆலயத் தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளு கின்ற நடராஜப் பெருமானாருடைய வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளைப் பணிந்து அவருடைய சந்நிதியில் அந்தப் பெருமானாருடைய திருவருளைப் பெற்றுக் கொண்டு பொய்யாகிய இந்த மானிடப் பிறவியாகிய நோயைப் போக்கும் அழகிய ஒரு திருவீதியில் அந்த நாய னார் புரண்டு, வலமாக வந்து சென்று எல்லா உலகங் களிலும் வாழ்பவர்கள் நிறைந்து கூடியுள்ள அந்த அழகிய சிவத்தலத்தினுடைய எல்லையில் இருந்தபடியே நடராஜப் பெருமானாரைப் பணிந்துவிட்டு நடராஜப் பெருமானா ரைத் துதித்துப் பிறகு சொல்லுவதற்கு அரியதாக உள்ள பெருமையைப் பெற்றவராகிய அந்த நாயனார் திருநாரை >艇 யூருக்கு எழுந்தருளிச் செளந்தரேசரை வணங்கிவிட்இேே திருப்பதிகத்தைப் பாடி யருளி |ப்பால் எழுந்தருளுபவ

ரானார். பாடல் வருமாறு :

" அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற

கழல்வினங்கி அருள்முன் பெற்றுப் - பொய்ப்பிறவிப் பிணியோட்டும் திருவீதி

புரண்டுவலம் கொண்டு போந்தே எப்புவனங்களும்நிறைந்த திருப்பதியின்

எல்லையினை இறைஞ்சி ஏத்திச் செப்பரிய பெருமையினார் திருகாரை ஆர்பணிந்து பாடிச் செல்வார்." அப்பொழுதே-திருநாவுக்கரசு நாயனாருக்குத் திருகு" - சம்பந்த மூர்த்தி நாயனாரை வணங்க வேண்டுமென்ற விருப்பம் உண்டான அந்தச் சமயத் திலேயே. அம்பலத்துள்