பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T302 பெரிய புராண விளக்கம்-தி

சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம் பலத்தில். ஆடுகின்ற-திருநடனம் புரிந்தருளுகின்ற. கழல்வெற்றிக் கழலைப் பூண்ட நடராஜப் பெருமானாருடைய திருவடிகளை; ஆகுபெயர். வணங்கி-அந்த நாயனார் பணிந்துவிட்டு. அருள்-அந்த நடராஜப் பெருமானார் வழங் கிய திருவருளை. முன்-அவருடைய சந்நிதியில். பெற்று. பெற்றுக்கொண்டு. ப்:சந்தி. பொய்-நிலையாமையாகிய பொய்த்தன்மையைப் பெற்ற, ப்:சந்தி. பிறவி-இந்த மானிடப்பிறவியாகிய, ப்:சந்தி.பிணி-நோயை.ஒட்டும்-போக் கும். திருவீதி-சிதம்பரத்தில்உள்ள ஒரு வீதியில், திரு-அழகிய: செல்வர்கள் வாழும் எனலும் ஆம்; திணை மயக்கம். புரண்டு-அங்கப்பிரதட்சிணம் புரிந்தருளி. வலம்கொண்டுபிறகு எழுந்திருந்து நடராஜப் பெருமானாருடைய ஆல. யத்தை வலமாக வந்து. போந்து-அங்கிருந்து எழுந்தருளி. ர:அசை நிலை. எப்புவனங்களும்-எல்லா உலகங்களிலும் வாழ்பவர்கள் இட ஆகுபெயர். நிறைந்த-நிறைந்து கூடி யுள்ள. திருப்பதியின்-அந்த அழகிய சிவத்தலமாகிய சிதம் பரத்தினுடைய எல்லையினை-எல்லையில் இருந்தபடியே: உருபுமயக்கம், இறைஞ்சி-நடராஜப் பெருமானாரை அந்த நாயனார் வணங்கி. ஏத்தி-துதித்து. ச்:சந்தி. செப்பரியஎடுத்துக் கூறுவதற்கு அரியதாக உள்ள. பெருமையினார்பெருமையைப் பெற்றவராகிய அந்த நாயனார். திருநாரை ஆர்-திருநாரையூருக்கு எழுந்தருளி. பணிந்து-செளந்த ரேசரை வணங்கிவிட்டு. பாடி-ஒரு திருப்பதிகத்தைப் பாடி யருளி, ச்சந்தி. செல்வார்-அந்தத் திருநாரையூரை விட்டு மேலே எழுந்தருள்பவரானார். N. ... .

திருநாரையூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் செளந்தரேசுவரர். அம் பிகை திரிபுரசுந்தரி யம்மை. சிதம்பரத்திலிருந்து தென் மேற்குத் திசையில் 8மைல் தூரம் சென்று குரைாட்சி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து காட்டுமன்னார்குடிக்குச்