பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 333.

செல்லும் வழியில் ஒன்றரை மைல் சென்று, அந்த வழியை விட்டுத் தென்திசையில் திரும்பி முக்கால் மைல் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். இது நாரை பூசித்த தலம். சிதம்பரத்தில் சேமித்து வைத்திருந்த தேவாரத் திருமுறை களை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப்பிள்ளையார் என்னும் விநாயகப் பெருமானார் எழுந்தருளியுள்ள தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

" செம்பொன்னை நன்பவளம் திகழும் முத்தைச்

செழுமனியைத் தொழுமவர்தம் சித்தத் தானை வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி

மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற கம்பனை எம் கயிலாய மலையான் தன்னைக்

கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் நம்பனைன: பெருமானை நாதன் தன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடிய குளிய திருக்குறுந் தொகை ஒன்று வருமாறு:

  • வீறு தானுடை வெற்பன் மடந்தைஓர்

கூற னாகிலும் கூன் பிறை சூடிலும் நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக் காறு சூடலும் அம்ம அழகிதே. அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிா ஆமற்றொரு திருத்தாண்டகம் வருமாறு:

சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச்

சுடராழி நெடுமாலுக் கருள்செய்தானை அல்லானைப் பகவானை அரியான்தன்னை

அடியார்கட் கெளியானை அரண் முன்றெய்த. வில்லானைச் சரம் விசயற் கருள் செய்தானை

வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பிஏத்தும்

3 *