பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 இபரிய புராண விளக்கம்

நல்லானைத் தீயாடும் நம்பன் தன்னை

நாரையூர் நன்னகரிற் கண்டேன்நானே.” பிறகு வரும் 180-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'திருத்தொண்டர்களினுடைய கூட்டம் தம்முடைய பக்கத்தைச் சுற்றி வர நடராஜப் பெருமானாரைத் தம்மு டைய தலையின்மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்ட திருக்கை களோடு விபூதியைத் தம்முடைய திருமேனி முழுவதும் பூசிக் கொண்ட திருக்கோலம் தம்மைப் பார்த்தவர்களுடைய உள் ளங்கள் கசிவை அடைந்து கரைந்து உருக்கத்தை அடையும் கருணையினால் தம்முடைய கண்களிலிருந்து வழியும் நீர் திரு மேனியினுடைய இடங்கள் எல்லாம் சொரிந்து காண்பிக்கத் தெளிவான அலைகள் வீசும் சமுத்திரத்தில் தம்மைக் கட்டிச் சமணர்கள் விட்ட கருங்கல் ஆழாமல் அந்தக் கருங் கல்லே தெப்பமாக மாற அதைச் செலுத்திக் கரையில் ஏறி யருளும் திருநாவுக்கரசு நாயனாரும் சொற்சுவை பொருட் சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற செந்தமிழ் மொழி யினால் எழுதும் வேதமாகிய தேவாரத் திருப்பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளிய தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளிய திருப்புகவி யாகிய சீகாழியின் பக்கத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு :

" தொண்டர்குழாம் புடைசூழத் தொழுகரத்

தொடுநீறு துதைந்த கோலம் - கண்டவர்தம் மனம்கசிந்து கரைந்துருகும்

கருணைபுறம் பொழிந்து காட்டத் தெண்டிரைவாய்க் கல்மிதப்பில் உகைத்தேறும் திருநாவுக் கரசர் தாமும் - வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.' - தொண்டர்- திருத்தொண்டர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குழாம். கூட்டம். புடை-தம்முடைய