பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 305

பக்கத்தை.சூழ-சுற்றிவர. தொழுகரத்தொடு-நடராஜப்பெரு மானாரைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்ட திருக்கைகளோடு. கரம்:ஒருமை பன்மை மயக்கம். நீறு-விபூதியை. துதைந்த-தம்முடைய திருமேனி முழுவதும் பூசிக் கொண்ட கோலம்-அழகிய திருக்கோலம், கண்டவர் தம்- தம்மைப் பார்த்தவர்களுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. மனம்-உள்ளங்கள்; ஒருமை பன்மைமயக்கம். கசிந்து-கசிவை அடைந்து, கரைந்து உருகும்உருக்கத்தை அடையும். கருணை - கருணையினால். புறம்-தம்முடைய கண்களிலிருந்து வழியும் நீர் தம்முடைய திருமேனியில் உள்ள இ - ங் கள் எல்லாவற்றிலும், பொழிந்து - சொரிந்து. காட்ட-தம்முடைய பக்தியைக் காண்பிக்க. த்:சந் தி. தெண்-தெளிவைப் பெற்ற, திரை வாய்- அலைகள் வீசும் சமுத்திரத்தில் ஆகுபெயர். திரை: ஒருமை பன்ம்ை மயக்கம், க்:சந்தி. கல்-கருங்கல்லாகிய மிதப்பில்-தெப்பத்தில் சமணர்கள் திருநாவுக் கரசு நாய னாரை ஒரு கருங்கல்லில் கட்டிச் சமுத்திரத்தில் தள்ளிவிட அந்தக் கருங்கல்ல்ே தெப்பமாக மாற அதன்மேல் ஏறி அந்த நாயனார் கரையை அடைந்தார். உகைத்து-அந்தத் தெப்பத் தைச் செலுத்தி. ஏறும்-கரையில் ஏறும். திருநாவுக்கரசர் தாமும்-திருநாவுக்கரசு நாயனாரும்; தாம், அசைநிலை. வண் - சொற்சுவை, பொருட்சுவை என்னும் வளப்பத்தைப் பெற்ற.தமிழால்-செந்தமிழ் மொழியினால், எழுதுமறை-ஏடு களில் வரையும் வேதமாகிய தேவாரத் திருப்பதிகங்களை. வடமொழியில் உள்ள வேதத்தை எழுதாக் கிளவி என்பர். இந்தத் தேவாரத் திருப்பதிகங்கள் எழுதும் மறை ஆயின. மொழிந்த-திருவாய் மொழிந்தருளிய. பிரான்-தலைவராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார். திருப்புகலி-திருவவ தாரம் செய்தருளிய திருப்புகலியாகிய சீகாழியினுடைய. மருங்கு-பக்கத்தை சார்ந்தார்-அந்த நாயனார் அடைந்தார்.