பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பெரிய புராண விளக்கம்-இ.

எழுதுமறை: பழுதிவிறை எழுது மொழி தமிழ்விரசன் வழி மொழிகள்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய, னாரும், எல்லையிலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை.', 'எழுதும் மாமறையாம் பதிகத்திசை முழுதும் பாடி', 'எழுது மாமறையாம் பதிகத்திசை போற்றி.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. .

அடுத்து வரும் 181-ஆம் சுவியின் உள்ளுறை வருமாறு: உயரமாக உள்ள மேருமலையாகிய வில்லை ஏந்திய விரட்டானே சுவரர் கொடுமையாக இருக்கும் சூலை. நோயை வழங்கியருளி தமக்கு நேரில் முன் காலத்தில் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனார் சீகாழிக்கு எழுந் தருள அதைக் கேட்டருளி ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் அந்தத் திருநாவுக் கரசு நாயனாரைப் பார்க்கத் தக்கதாகிய பெரிய விருப்பம் மிகுதியாக எழுந்த தம்முடைய திருவுள்ளத்தில் உண்டாகிய எண்ணத்தோடு மூண்டெழுந்த பிரமபுரீசருடைய திருவரு. ளைப் பெற்று மகிழ்ந்த உள்ளங்களைப் பெற்ற பக்தர்கள் தம் பக்கத்தைச் சுற்றி வர எழுந்தருளி முன்னால் அந்தச் கோழிக்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு: .

நீண்டவரைவில்லியார் வெங்சூலை

மடுத்தருளி நேரே முன்னாள் " . . ஆண்டஅர செழுந்தருளக் கேட்டருளி

ஆளுடைய பிள்ளை யாரும் காண்டகைய பெருவிருப்புக் கைம்மிக்க

திருவுள்ளக் கருத்தி னோடு மூண்டஅருள் மனத்தன்பர் புடைசூழ

எழுந்தருளி முன்னே வந்தார். - நீண்ட-உயரமாக உள்ள வரை-மேருமலையாகிய,வில்லி யனர்-வில்லை ஏந்தியவராகிய விரட்டானேசுவரர்.வெம்