பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 30??

கொடுமையாகத் தம்முடைய வயிற்றைப் பற்றிக் கொண்டி. ருந்த, சூலை-சூலை நோயை. மடுத்தருளி-வழங்கியருளி.. நேர்-நேரில், ஏ: அசைநிலை, முன் நாள்-முன் ஒருகாலத்தில், ஆண்ட அந்தச் சூலை நோயைப் போக்கியருளி ஆட். கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம், எழுத்தருள-சீகாழிக்கு எழுந்தருள, க்:சந்தி. கேட்டருளிஅதைக் கேட்டருளி, 'ஆளுடைய பிள்ளையாரும்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். காண்தகைய - பார்க்கத்தக்க பான்மையை உடைய' பெரு-பெருகிய. விருப்பு-விருப்பம். க்:சந்தி. கைம்மிக்கமிகுதியாக எழுந்த திருவுள்ள-தம்முடைய திருவுள்ளத். தில் உண்டாகிய, க்:சந்தி. கருத்தினோடு-எண்ணத். தோடு. மூண்ட-மூண்டெழுந்த அருள்-பிரமபுரீசருடைய திருவருளை. மனத்து-பெற்று மகிழ்ந்த உள்ளங்களைப் பெற்ற, ஒருமை புன்மை மயக்கம். அன்பர்-பக்தர்கள்;ஒருமை. பன்மை மயக்கம். புடை-தம்முடைய பக்கத்தை, சூழ-சுற்றி வர. எழுந்தருளி-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந் தருளி. முன்-முன்னால். ஏ: அசைநிலை. வந்தார்-அந்தச் கோழிக்கு எழுந்தருளினார்.

பிறகு வரும் 182-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு சீகாழிக்கு எழுந்தருளித் திருஞான சம்பந்தம் மூர்த்தி நாயனாரை வணங்கி அடைந்து வீரட்டானே சுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனார் பக்தியினால் தம்முடைய திருவுள்ளத்தில் உருக்கத்தை அடையத் திருத் தொண்டர்கள் கூடியிருந்த கூட்டத்துக்கு நடுவில் எழுந் தகுளி குற்றம் இல்லாத பெருகி எழும் விருப்பத்தோடு ஆத்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடி களில் விழுந்து வணங்க அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி தாயனாரும் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை வணங்கி விட்டு அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு எழுது வதற்கு அரியவையாக உள்ள செந்தாமரை மலர்களைப்