பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 345

மயக்கம். ஞான-அறிவைப் பெற்றவரும்; திணை மயக்கம். -க்:சந்தி. கன்றும்-கன்றுக் குட்டியைப் போன்றவரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் உவம ஆகு பெயர். அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். சென்று-எழுந்தருளி. செம்-சிவப்பாக இருக்கும். சடை-சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற. வானவர்மகாதேவராகிய பிரமபுரீசர். கோயில்-எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை. சார்ந்தார்.அந்த இரண்டு நாயன்மார்களும் அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அன்று, ஏ: ஈற்றசை நிலைகள். -

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குக் கன்றுக் குட்டி உவமை: புண்ணியக் கன்றனையவர்தாம் பொருமி அழுதருளினார்.’’, தெய்வ ஞானக் கன்றினை.', 'மழ விடை இளங்கன்றொன்று வந்து. என்று சேக்கிழார் பாடியருளியவற்றைக் காண்க. - -

அடுத்து வரும் 186-ஆம் கவிபின் கருத்து வருமாறு: - பண்ணைப் போல ரீங்காரம் செய்யும் வண்டுகள் முரலும் மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும். பூம்பொழில் சுற்றியிருக்கும் சீகாழியில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பரமேசுவரரா கிய பிரமபுரீசருடைய ஆலயத்திற்கு முன்னால் உயரமாக நிற்கும் அழகிய கோபுர வாசலில் இருந்தபடியே பிரமபுரீசு வரரை வணங்கி விட்டு ஆலயத்துக்குள் நுழைந்து ஆகாயம் தாழுமாறு உயரமாக விளங்கும் பெரிய விமானத்தை Qa மாக வந்து தரையில் விழுந்து அந்தப் பிரமபுரிசரை வணங்சி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டிருந்த சமயத்தில் உண்மையாகிய கோழியில் திருவவதாரம் சென் தருளும் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான. சமபந்து மூர்த்தி நாயனார், அப்பரே, தங்களுடைய தலைவராகியூ iரட்டானேசுவரரைத் தேவரீர் பாடியருள்வீராக’ என்று திருஞானசம்பந்த முர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தரு