பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்-6

இருட்கடுவுண் டவர்.அருளும் உலகம் எல்லாம்

ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருட்கலைஞா னக்கன்றும் அரசும் சென்று

செஞ்சடைவானவர்கோயில் சார்ந்தார் அன்றே.’’ அருள்-பிரமபுரீசர் வழங்கிய திருவருள். பெருகு-பெருகி எழும். தனி-ஒப்பற்ற. க்:சந்தி. கடலும்-சமுத்திரமும். உலகுக்கு எல்லாம்-இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் எல்லாருக்கும்; இட ஆகுபெயர். அன்பு செறி-அன்பு செறிந்திருக்ரும். கடலும் - சமுத்திரமும். ஆம் - ஆகும். எனவும்- என்று கூறுமாறும்; இடைக்குறை. ஓங்கும்-ஒங்கி வளர்ந்திருக்கும். பொருள்-நல்ல அர்த்தத்தைப் பெற்ற. சமய-சைவ சமய, முதற் சைவ-முதன்மையான சைவ சமய. நெறி-வழி. தான்: அசை நிலை. பெற்ற-பெற்றிருக் கும். புண்ணிய - புண்ணியமாகிய. கண் இரண்டு-இரண்டு கண்கள்; ஒருமை பன்மை மயக்கம். எனவும்-என்று கூறு மாறும்; இடைக்குறை. புவனம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். இருள்-இருட்டைப் போலக் கரிய நிறத்தைக் கொண்ட, கரிய நிறம் என்றாலும் இங்கே நீல நிறத்தைக் கொள்ள வேண்டும். கருமையையும் நீலநிறம் என்பது ஒரு மரபு: நீல நிறக் காக்கை' என வருதல் காண்க. கடு-திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற் கடலில் எழுந்த ஆலகால விடத்தை, 'உண்டவர்-விழுங்கியவராகிய பிரமபுரீசர். அருளும்-வழங்கிய திருவருளும், உலகம்எல்லாம். இந்தப் பூ மண்டலத்தில் வாழும்உயிர்கள் எல்லாவற்றையும்; இட ஆகு பெயர். ஈன்றாள்தன்-பெற்றெடுத்தவளாகிய பெரிய நாயகி. தன்:அசை நிலை. திருவருளும்-வழங்கிய திருவருளும் எனவும்-என்று கூறுமாறும்; இடைக்குறை. கூடி-இரண்டு நாயன்மார்களும் சேர்ந்து கொண்டு. த்:சந்தி. தெருள்-அறிவில் தெளிலைப் பெற்றவரும்; தினை மயக்கம். கலை அறுபத்து. நான்கு கலைகளில் வல்ல; ஒருமை பன்மை