பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 313.

வணங்கும்-பணியும். விருப்பின்-விருப்பத்தை; உருபுமயக்கம். மிக்கார்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் மிகுதியாகப் பெற்றிருந்தார். - .

பிறகு உள்ள 185-ஆம் கவியின் கருத்து வருமாறு: பிரமபுரீசர் வழங்கிய திருவருள் பெருகி எழும் ஒப்பற்ற சமுத்திரமும், இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் எல்லாருக்கும் அன்பு செறிந்திருக்கும் சமுத்திரமும் ஆகும் என்று கூறுமாறும், ஒங்கி வளர்ந்திருக்கும் அர்த்தத்தைப் பெற்ற சைவ சமயமாகிய முதன்மையைப் பெற்ற சைவ சமயவழி பெற்றிருக்கும் புண்ணியமாகிய இரண்டு கண்கள் என்றுகூறுமாறும், இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் இருட்டைப் போன்ற கரிய நிறத்தைக் கொண்டதும், திருமால் பள்ளிகொண் டருளிய பாற்கடலில் எழுந்ததுமாகிய ஆலகாலவிடத்தை விழுங்கியவராகிய பிரமபுரீசர் வழங்கிய திருவருளும்.இந்தப் பூமண்டலத்தில் வாழும் உயிர்கள் எல்லாவற்றையும் ஈன் றெடுத்தவளாகிய பெரிய நாயகி வழங்கியதிருவருளும் என்று கூறுமாறும், இரண்டு நாயன்மார்களும் சேர்ந்துகொண்டு அறிவில் தெளிவைப் பெற்றவரும், அறுபத்து நான்கு கலை களில் வல்ல அறிவைப் பெற்றவரும், கன்றுக்குட்டியைப் போன்றவரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும், திருநாவுக்கரசு நாயனாரும் எழுந்தருளி சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவரும் மகாதேவரும் ஆகிய பிரமபுரீசர் எழுந்தருளி யிருக்கும் ஆலயத்தை அந்த இரண்டு நாயன்மார்களும் அடைந் தார்கள். பாடல் வருமாறு: - -- " அருட்பெருகு தனிக்கடலும் உலகுக் கெல்லாம்

அன்டிசெறி கடலுமாம் எனவும் ஓங்கும் பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற

புண்ணியக்கண் இரண்டெனவும் புவனம் உய்ய