பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 321

  • * t 1@n!... burrrr மழுவொன்று பற்றிய -

கையன் பதிவினவில் கடையார் கொடிநெடு மாடங்கள்

ஒங்கும் கழுமலமாம் மடைவாய்க் குருசினம் பாளை

விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா

திருக்கும் பெரும்பதியே. ' பிறகு வரும் 188-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த நட்பாகிய பான்மையோடு திருநாவுக்கரசு நாய னாரும் ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் ஒருவரோடு ஒருவர் அளவளாவியதால் உண்டான ஆனந்தம் ஓர் அளவே இல்லாத தங்களுடைய திருவுள்ளங்களில் உருக்கத்தோடு அந்தத் திருமடத்தில் தங்கிக்கொண்டு வாழும் காலத்தில் திருநாவுக்கரசு நாயனா ருடைய திருவுள்ளத்தில் மைபோலக் கரிய நிறம் தழைத்து ஒங்கும் நீலமணின்யப் போன்ற திருக்கழுத்தைப் பெற்ற வராகிய சிவபெருமானார் பொன்னைக் கொழிக்கும் காவிரி யாறு பாயும் சோழநாட்டில் நிலை பெற்று விளங்கிய சிவத் தலங்கள் எல்லாவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களைப் பணிந்து வாழ்த்துவதற்கு; உண்மையாகித் தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி யெழுந்த பெரியதாக இருக்கும் விருப்பத்தை அந்த ஆளு டைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாருக்கு அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந் ... தருளிச் செய்தவுடன், அந்தத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் அந்தக் கருத்தை விரும்பிச் சம்மதிப்பாரானார். பாடல் வருமாறு:

அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும்

அளவளாவியமகிழ்ச்சி அளவிலாத