பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பெரிய புராண விளக்கம்-6

நாயனார் நின்று கொண்டு. பரிவறு. பக்தியைப் பெற்ற. செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலை-மாலை யாகிய ஒரு திருப்பதிகத்தை. பத்தியோடும்.பக்தியுடனும். "பார் கொண்டு மூடி' எனும்- பார் கொண் டு மூடி' என்று. தொடங்கும். எனும்: இ ைடச்குறை. பதிகம்-ஒரு திருப் பதிகத்தை. போற்றி-அந்தத் தோணியப்பரை வாழ்த்திப் பாடியருளி. அரிய-பிரிவதற்கு அரியதாக உள்ள வகைவிதத்தில். புறம்-அந்த ஆலயத்திற்கு வெளியில். போந்துஎழுந்தருளி. பிள்ளையார்தம்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய தம்: அசை நிலை. திரு-அழகிய மடத்தில்-திருமடத்திற்கு உருபு மயக்கம். எழுந்தருளி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. அமுது செய்து அங்கே திருவமுது செய்தருளி. மருவிய-தம்மிடம் பொருந்தியுள்ள. நண்பு-நட்பை உறும்பெற்றிருக்கும். கேண்மை-உறவு. அற்றை நாள் போல்அன்றைத்தினம் இருந்ததைப் போல. வளர்ந்து-வளர்ச்சியை அடைந்து, ஒங்க-ஒங்கி எழ, உடன்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு. பலநாள்-பல தினங்கள்: ஒருமை பன்மை மயக்கம். வைகும்-தங்கிக்கொண்டிருக்கும். நாளில்-காலத்தில், . -

இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருவிருத்தம் வருமாறு:

பார்கொண்டு மூடிக்கடல் கொண்ட ஞான்றுநின் பதம்எல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின.

என்பர் நளிர்மதியம் - கால்கொண்ட வண்கைச் சடைவிரித்

தாடும் கழுமலவர்க் காளன்றி மற்றுமுண் டோ அந்தண்

ஆழி அகவிடமே." திருக் கழுமலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடி யருளியு மற்றொரு திருவிருத்தம் வருமாறு: .