பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் Błł

அடுத்து வரும் 187-ஆம் கவியின் உள்ளுறைவருமாறு: - பெரியநாயகியோடு சீகாழியில் உள்ள பிரமிபுரீச் தருடைய ஆலயத்தில் ஒரு கட்டுமலையில் உள்ள தோணியின் மேல் விரும்பி அமர்ந்திருந்தருளும் தம்முடைய தலைவனா கிய தோணியப்பனுடைய சந்நிதியில் அந்தத் திருநாவுக் கரசு நாயனார் நின்றுகொண்டு, பக்தியைப் பெற்ற செந் தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்வதி கத்தைப் பக்தியோடும் அந்தத் தோனியப்பரை வாழ்த்திப் பாடியருளி, பிரிவதற்கு அரியதாக உள்ள விதத்தில் அத்த ஆலயத்துக்கு வெளியில் எழுந்தருளி ஆளுடைய பிள்ளைங்ா ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயாருடைய திருமடத் திற்கு அந்த நாயனார் எழுந்தருளி, அங்கே திருவமுது செய் தருளி தம்மிடம் பொருந்திய நட்பைப் பெற்ற உறவு அன்றைத்தினம் இருந்ததைப் போலப் பிறகும் வளர்ச்சியை அடைந்து ஓங்கி எழ, அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு பல் தினங்கள் தங்கிக் கொண்டிருக்கும் காலத் தில். பாடல் வருமாறு -

  • பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது

பேணிவீற் றிருக்தருளும் பிரான்முன் கின்று பரிவுறுசெங் தமிழ்மாலை பத்தி யோடும்.

"பார்கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றி அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம்

திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து மருவியகண் புறுகேண்மை அற்றைநாள் போல்,

வளர்ந்தோங்க உடன்பலகான் வைகும் நாளில். ' இந்தப் பாடல் குளகம். பெரிய பெருமாட்டியுடன்பெரிய நாயகியோடு. தோணிமீது-சீகாழியில் உள்ள பிரம புரீசருடைய ஆலயத்தில் ஒரு கட்டு மலையில் உள்ள தோணி வின் மேல். பேணி-விரும்பி. வீற்றிருந்தருளும்-அமர்ந்திருந் தருளும். பிரான்-தம்முடைய தலைவனாகிய தோனியங்ப ஆணுடைய முன்-சந்நிதியில். நின்று அந்தத் திருநாவுக்க