பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவு க்கரசு நாயனார் புராணம் - 3.23%

ம்:சந்தி, போற்ற-வாழ்த்துவதற்கு மெய்த்து-உண்மை, யாகி, எழுந்ததம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த.. பெரும்-பெரியதாக இருக்கும். காதல்-விருப்பத்தை, பிள்ளை. யார்க்கு-அந்த ஆளுடைய பிள்ளை யாராகிய திருஞான - சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. விளம்புதலும்-அந்தத் , திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த, வுடன். அவரும்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும். அது-அந்தக் கருத்தை. மேவி-விரும்பி. நேர்வார்சம்மதிப்பாரானார்.

அடுத்து வரும் 189-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'திருவதிகை விரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனார் பல சிவத்தலங்களுக்கும் எழுந் , தருளிவிட்டுத் திருக்கோலக்காவை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடும் அந்தத் திருக்கோலக் காவுக்கு எழுந்தருளி சத்தபுரீசுவரரை வணங்கி விட்டுப் பக்தியை மேற்கொண்டு அந்தச் சீகாழிக்கே திரும்பி அந்த நாயனார் எழுந்தருளினார்; அந்தத் திருநாவுக்கரசு நாய னாரும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடத்தில் விடை. யைப் பெற்றுக்கொண்டு இதன்பிறகு இருக்கு வேதம், யஜூர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் பாடியருளிய தலைவராகிய சிவபெரு மானார் விரும்பி எழுந்தருளி யிருக்கும் சிவத்தலங்களாக உள்ள புகழ் நீண்டு வளர்ந்துள்ள திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடூர், நெடுங்காலமாகப் புகழ் பெற்று விளங்கும் திருக்குறுக்கை, திருநின்றியூரும், காண்த்தக்க வன்ப்பைப் பெற்ற திருநனிபள்ளி முதலாக உள்ள சிவத் தலங்கள்ைத் திருநாவுக்கரசு நாயனார் அடைந்து தங்களு. டைய நெற்றிகளில் ஒற்றைக்கண்களைப் பெற்றவர்களாகிய குற்றம்பொறுத்த நாதேசுவரரையும், சிவலோக நாதரை ஆம், அருட்சோம நாதேசுவரரையும், விரட்டேசுவரரையும், மகாலக்சுேவரரையும், நற்றுனைப் பரையும் அவர்