பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24 - பெரிய புராண விளக்கம்-5

களுடைய வெற்றிக் கழல் பூண்ட திருவடிகளை அந்தத்திரு. நாவுக்கரசு நாயனார் வணங்கி விட்டுத் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோடு சேர்ந்து கொண்டு எழுந்தருள் வாரானார். பாடல் வருமாறு: - - r

' ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவை

அவரோடும் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு மீண்டருளி னார்; அவரும் விடைகொண் டிப்பால்

வேதநாயகர்விரும்பும் பதிக ளான நீண்டகருப் பறியலூர் புன்கூர் டுேர்

நீடுதிருக் குறுக்கைதிரு கின்றி யூரும் காண்டகைய கனிபள்ளி முதலா கண்ணிக்

கண்ணுதலார் கழல்தொழுது கலந்து செல்வார்.’ ஆண்ட-திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட் கொண்ட அரசு-திருநாவுக்கரசு நாயனார்; தினை மயக்கம். எழுந்தருள-பல சிவத்தலங்களுக்கும் எழுந்தருளி விட்டு. க்:சந்தி. கோலக்காவை-திருக்கோலக் காவை. அவரோடும்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரோடும். சென்று-எழுந்தருளி. இறைஞ்சி-சத்தபுரீசுவரரை வணங்கி விட்டு. அன்பு-பக்தியை. கொண்டு-மேற்கொண்டு. மீண்டருளினார்-அந்தச் சீகாழிக்கே அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திரும்பி எழுந்தருளினார். அவரும்.அந்தத் திரு நாவுக்கரசு நாயனாரும். விடைகொண்டு-திருஞான சம்பந்த மூர்த்தி நாயானரிடம் விடை பெற்றுக்கொண்டு. இப்பால்இதன் பிறகு. வேத-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம் வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-பாடியருளிய தலைவ ராகிய சிவபெருமானார். விரும்பும்-விரும்பித் திருக் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும். பதிகளான-சிவத் தலங்களாக உள்ள. நீண்ட-புகழ் நீண்டு வளர்ந்துள்ள. கருப்பறியலூர்-திருக்கருப்பறியலூர். புன் கூர் - திருப்புன்.