பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 225

கூர் நீடூர்-திருநீடுர், நீடு-நெடுங்காலமாகப் புகழ்பெற்று விளங்கும். திருக்குறுக்கை-அழகிய திருக்குறுக்கை. திரு நின்றியூரும்-அ ழ கி ய் திருநின்றியூரும். காண்தகையபார்க்கத்தக்க அழகைப் பெற்ற. நனிபள்ளி-திருநனிபள்ளி: முதலா-முதலாக உள்ள பல சிவத்தலங்களை. நன்னி. அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைந்து. க்:சந்தி. கண்ணுதலார்-நேற்றிகளில் ஒற்றைக் கண்களைப் பெற்ற வர்களாகிய குற்றம் பொறுத்த நாதேசுவரரையும், சிவலோக நாதரையும், அருட்சோம நாதேசுவரரையும், வீரட்டேசு வர ரை யு ம், மகாலக்ஷ்மீசுவரரையும், நற்றுணையப் பன்ரயும். கழல்-அவர்களுடைய வெற்றிக் கழலைப் பூண்ட 'திருவடிகளை, ஆகுபெயர். தொழுது-திருநாவுக்கரசு நாய 'னார் வணங்கிவிட்டு. கலந்து-திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரோடு சேர்ந்துகொண்டு. செல்வார்.மேலே எழுத் தருள்வாரானார். .

திருக்கோலக்கா: இது சோழநாட்டில் உள் ள சிலத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சத்த புரீசுவரர். அம்பிகை ஒசை கொடுத்த நாயகி. இந்தச் சிவத் தலம் இந்தக் காலத்தில் திருத்தாளமுடையார் கோயில் என வழங்கும். இது சீகாழிக்குத் தெற்குத் திசையில் அரை மைல் தூரத்தில் உள்ளது. சீகாழிக்கும் திருக்கோலக் காவுக்கும் இடையில் கழுமலவாய்க்கால் என்னும் கால்வாய் ஒடுகிறது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பொற் றாளம் பெற்ற தலம் இது. இதைப்பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு :

நாளும் இன்னிசையால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்தனுக்குல சுவாமுன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்

தன்மையாளனை என்மனக் கருத்தை

தி-2,