பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண் விளக்கம்-கி.

ஆளும் பூதங்கள் பாடநின்றாடும்

அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும் கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. '

திருக் கோலக்காவைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய திருப்பதிகம் இப்போது கிடைக்கவில்லை. மறைந்த திருப்பதிகங்களில் அதுவும் ஒன்று போலும்! -

திருக்கருப்பறியலூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் குற்றம் பொறுத்த நாதேசுவரர். அம்பிகை கோல்வளையம்மை, தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது மண்ணிப் பள்ளம் என்னும் ஊருக்கு வடக்குத் திசையில் ஒரு மைல் துரத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் விளங்கும் திருக்கோயிலுக்குக் கொகுடிக் கோயில் என்று பெயர். இந்தத் தலத்தில் வாழ்ந்த அந்தணர்களைச் சிறப் பித்துத் தேவாரத்தில், முட்டாமே நாடோறும் நீர் மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும், கட்டார்ந்த இண்டை கொண்டடி சேர்த்தும் அந்தணர்தம் கருப்பறியலூர்..", :பொய்யாத வாய்மையாற் பொடிப் பூசிப் போற்றிசைத்துப் பூசை செய்து கையினால் எரி ஒம்பி மறைவளர்க்கும். அந்தணர்தம் கருப்பறியலுரர்.’’ என வருவனவற்றைக்.

காண்க: . , , . . . . . . . ;

ஒரு சமயம் தேவர்களுக்கு அரசனாகிய இந்திரன் இறு: மாப்போடு கயிலைக்குச் செல்ல, கயிலாசபதி ஒரு பூத வடிவத்தை எடுத்துக்கொண்டருளி அவனுக்கு முன்னால் காட்சியை வழங்கியருள, அதைத் தெரிந்து கொள்ளாத அந்த இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதத்தை அவர்மேல் எறிந்தபோது அவர் சினம் முண்டு நிற்க, இந்திரன் தன்னு டைய குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுமென்று கூறி அவரை வண்ங்கிப் பூசித்த,தலம் இது. இந்தக் காரணத்தி: னால் சிவபெருமானாருக்கு. குற்றம் பொறுத்தநாதர்”