பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 227

என்ற திருந்ாமம் வந்தது. இதைப் பற்றிய பாசுரம் ஒன்று

வருமாறு: - நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானைத் தீயானைக் கதிரானை

மதியானைக் கருப்பறிய லூர்க் கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையா

ளவளோடும் கொகுடிக் கோயில் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ

தவர் நமக் கினிய வாறே. * திருப்புன்கூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சிவலோக நாதர். அம் பிகை சொக்கநாயகி அம்மை. இது வைத்தீசுவரன் கோயி லுக்கு மேற்குத் திசையில் இரண்டு.மைல் தூரத்தில் உள்ளது. திருநாளைப் போவார் நாயனார் தம்மை நேரே தரிசித்து வணங்கும் பொருட்டுச் சிவலோக நாதர் தமக்கு முன்னே அமர்ந்திருந்த திருநந்தி தேவரைச் சற்றே விலகியிருக்கு மாறு பணித்தருளிய தலம் இது. "சற்றே விலகியிரும்பிள் ளாய், சந்நிதானம் மறைக்குதாம்; நற்றவம் புரியுந் திரு நாளைப் போவான் வந்திருக்கிறான்' என்று கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் பாடியருளியதைக் காண்க. சுந்தர மூர்த்தி நாயனாரும் ஏயர் கோன் கலிக்காம நாயனாரும் நண்பர்கள் ஆன் பின்பு இரண்டு நாயன்மார்களும் சென்று வணங்கிய தலம் இது. கலிக்காம நாயனார் பல திருப்பணிகளைப் புரிந்தருளிய, தலம் இது. கலிக்காம நாயனாருக்காக சிவலோக நாதர் பன்னிரண்டு வேலி நிலத்தை இரண்டு முறைகள் பெற்றுக்

மழையைப் பெய்யுமாறு செய்தருளி உலகத்தில் வாழும் மக்களையும் பிற உயிர்களையும் உஜ்ஜீவனத்தை அடையும் .