பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய புராண விளக்கம்-6

திக்குகில வும்பெருமை

திகழவரும் புகழனார்.” அக்குடியின்-அந்தக் குறுக்கை வேளாளர்களினுடைய குடும்பங்களில்; ஒருமை பன்மை மயக்கம். மேல்-மேலாக விளங்கிய தோன்றல்-புதல்வர். ஆய-ஆகிய. பெரும்-பெரு மையையும். தன்மையினார்.நல்ல இயல்புகளையும் பெற்ற வர். தன்மை: ஒருமை பன்மை மயக்கம். அந்த இயல்பு களாவன: கோபம் இன்மை, சோம்பல் இன்மை. விடா முயற்சி, விருந்தினர்களை வரவேற்று உபசரித்து விருந்துணவை வழங்கும் இயல்பு, யாவரும் புகழும் நல்ல நிலையில் வாழ்தல், தங்களுடைய மனைவிமார்களிடத்தில் காதலோடு ஒழுகுதல் முதலியவை. மிக்க-புகழ் மிகுதியாக உள்ள. மனை அறம்-இல்லறத் தர்மத்தை. புரிந்த-நடத்திய. விருந்தளிக்கும்-விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்து உணவுகளை வழங்கும். மேன்மையினார்-மேம் பாட்டைப் பெற்றவராகி. , ஒக்கல்-சுற்றத்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம், வளர்-வளரும். பெரும்-பெருமை யையும். சிறப்பின்-சிறப்பையும் கொண்டவராக; ஆகு பெயர். உளரானார்-இருப்பவரானார்; உள்ர்: இடைக் குறை. உளரானார்-நல்ல திருவுள்ளத்தைப் பெற்றவ ராக ஆனார். உளர்: இடைக்குறை. திக்கு-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள ஊர்களில் வாழும் மக்களிடம்; ஒருமை பன்மை மயக் கம்; இட ஆகு பெயர். நிலவும்-மேவும். பெருமை-பீடு. திகழவிளங்குமாறு. வரும்-பிறந்து வரும். புகழனார்-புகழனார் என்னும் திருநாமத்தைப் பெற்றவர். பெற்றவர் உளவரா னார் என்று கூட்டிப் பொருள் உரைக்க. - -

அடுத்து உள்ள 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: - "அந்தப் புகழனாருக்கு உரிமையை உடையதாகிய ஒப்பு இல்லாத குலமாகிய குடும்பத்தில் மகிழ்ச்சியை அடையுமாறு: