பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 31

ஒழுக்கத்தைப் பெற்ற. மரபில்-பரம்பரையில் பிறந்த குடிகுடிமக்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாப்பண் நடுவில். விலக்கு-சான்றோர்கள் ஆகாதவை என்று விலக்கும் குற்றங்கள் ஒருமை பன்மை மயக்கம். இல்-இல்லாத கடைக் குறை. மனை-இல்லற வாழ்வில் அமைந்த; ஆகு பெயர். ஒழுக்கத்தின் - நல்லொழுக்கமாகிய, மேதக்க-மேன்மை யையும் தகுதியையும் பெற்ற நிலை- நிலைத்து நிற்கும். நிலையைக் கொண்ட, வேளாண் குலத்தின் கண்-வேளா ளர்களினுடைய சாதியில்; வேளாண்: திணை மயக்கம். வரும் பிறக்கும். பெருமை-பெருமையைப் பெற்ற, க்:சந்தி. குறுக்கையர்தம்-குறுக்கையர்களினுடைய, ஒருமை பன்'ை மயக்கம்; தம்: அசை நில்ை. குடி-குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். விளங்கும்-அந்தத் திருவாய்மூரில் திகழும்.

பிறகு உள்ள 16-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அந்தக் குறுக்கை வேளாளர்களினுடைய குடும்பங்களில் மேலாக விளங்கிய புதல்வராகிய பெருமையையும் நல்ல இயல்புகளையும் பெற்றவர் புகழ் மிகுதியாக உள்ள இல்ல றத்தை நடத்தி விருந்தினர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்து உணவுகளைவ்ழங்கும் மேம்பாட்டைப் பெற்றவராகி, சுற்றத்தார்கள் வளரும் பெருமையையும் சிறப்பையும் கொண்டவராக இருப்பவரானார் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு. தென்கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும் உள்ள ஊர்களில் வாழும் மக்களிடம் மேவும் பெருமை விளங்குமாறு பிறந்து. விரும் புகழனார் என்பவர். பாடல் வருமாறு: -

'அக்குடியின் மேல்தோன்றல்

ஆயபெரும் தன்மையினார் மிக்கமனை அறம்புரிந்த

விருந்தளிக்கும் மேன்மையினார் இக்கல்வளர் பெருஞ்சிறப்பின்

உளரானார் உளரானார்