பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரிய புராண வி ளக்கம்-6

பண்புகளிலிருந்தும் தவறாத ஒழுக்கத்தைப் பெற்ற பரம் பரையில் பிறந்த குடிமக்களினுடைய நடுவில் விலக்குதல் இல்லாத இல்லற வாழ்வில் அமைந்த நல்லொழுக்கமாகிய மேன்மையையும் தகுதியையும் பெற்ற நிலையைக் கொண்ட வேளாளர்களினுடைய சாதியில் பிறக்கும் பெருமையைப் பெற்ற குறுக்கையர்களினுடைய குடும்பங்கள் திகழும்.” பாடல் வருமாறு: - :

' தவத்தின்கண் விளங்கியஅத்

தனிப்பதியில் அனைத்துவித கலத்தின்கண் வழுவாத

நடைமரபிற் குடிகாப்பண் விலக்கில்மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக்

குறுக்கையர்தம் குடிவிளங்கும்.” தவத்தின்கண்-இந்தப் பூ மண்டலத்தில். விளங்கிய-, விளக்கத்தைப் பெற்றுத் திகழ்ந்த, அத் தனிப் பதியில்-அந்த ஒப்பற்ற சிவத்தல்மாகிய திருவாய்மூரில். அனைத்து-எல்லா.' வித-வகைகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். நலத்தின் கண்-நல்ல பண்புகளிலிருந்தும்; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். அந்தப் பண்புகளாவன: பொறுமை, சான் றாண்மை, கோபமின்மை, சோம்பல் இன்மை, விடா முயற்சி, உறவினர்களைப் பாதுகாத்தல், பெண்மணிகள். கற்பு நெறி வழுவாமல் இருத்தல், ஆடவர்கள் தங்களுடைய - மனைவிமார்களிடம் என்றும் மாறாத காதலோடு விளங்கு தல், தங்களுடைய இல்லங்களுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரித்து விருந்துணவை வழங்குதல், ஆலயங் x களுக்குச் சென்று கடவுளை வணங்குதல், யாவரும் ஒற்று.

மையாக இருந்து வாழ்தல், இடித்துக் கூறும் நண்பர்கன்திரப் பெற்றிருத்தல் முதலியவை. வழுவாத-தவறாத நட்ை