பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 29

தெருக்களில்; ஒருமை பன்மை மயக்கம். ஆட்டும்-ஆடவர் களும் பெண்களும் ஏறிக் கொண்டு ஆட்டும். அணி-அழகிய. ஊசல்-ஊஞ்சல்கள் ஒருமை பன்மை மயக்கம். பல-பல வற்றை. காட்டும்-அந்தத் தெருக்களில் உயரமாக உள்ள திருமாளிகைகள் காண்பிக்கும். புலர்-விடியும் காலத்தில், வினையாலணையும் பெயர். நீலம்-அந்த நீலோற்பல மலர்கள். இருள்-இருட்டை. காட்டும்-தோன்றுமாறு, செய்யும். பொழுது-அந்த விடியற்கால நேரத்தில். உழவர்அந்தத் திருவாய்மூரில் உள்ள வயல்களில் பணிகளைப் புரியும் உழவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஒலி-உழும்போது ஏரில் கட்டப் பெற்ற மாடுகளை ஒட்டும் சத்தம். காட்டும்அந்த வயல்கள் கேட்குமாறு செய்யும். கலம்-பலவகையான பாத்திரங்களையும், பலவகையான அணிகலன்களையும்: ஒருமை பன்மை மயக்கம். அந்தப் பாத்திரங்களாவன: வெண்கலப் பானை, அரிக்கும் சட்டி, குடம், செம்பு, தவலை, ஈயச் செம்பு, அண்டா, குண்டா, போகி, கிண்ணங்கள், எண்ணெய்க் கரண்டி, இரும்புக் கரண்டி, பித்தளைக் கரண்டி முதலியவை. அந்த அணிகலன்களாவன: சுட்டி மாட்டல், ஜிமிக்கிகள், தோடுகள்,கடுக்கன்கள்,வைரக் கம்மல், அட்டிகை, காசு மாலை, நவரத்தின மாலை, கை வளையல் கள், மோதிரங்கள்,வங்கிகள், லோலாக்குகள், ஒட்டியானம், மேகலை, கால் காப்புக்கள், மெட்டிகள், பாதசரங்கள், சிலம்புகள், தண்டைகள், வெண்டயங்கள் முதலியவை. நீடு-திருவாய்மூரில் உயரம்ாக நிற்கும். மனை-திருமாளிகை கள்; ஒருமை பன்மை மயக்கம். காட்டும்-காண்பிக் கும். கரை-வரம்பை. காட்டா-காட்ட முடியாத, ப்:சந்தி. பெரு. பெரிய வளங்கள்-செல்வங்கள் அந்தத் திருவாய்மூரில் நிறைந்து விளங்கும். - . பிறகு உள்ள 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இந்தப் பூ மண்டலத்தில் திகழ்ந்த அந்த ஒப்பற்ற சிவத்தலமாகிய திருவாய்மூரில் எல்லாவகைகளாகிய நல்ல