பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பெரிய புராண விளக்கம்-5

அடுத்து வரும் 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருவாய்மூரில் உள்ள வயல்கள் நீலோற்பல மலர்கள் மலர்ந்திருப்பதைக் காட்டும்; மையைப் போன்ற கரிய களங்கத்தைச் சந்திரன் காட்டும்; மலர்ச்சியைப் பெற்று நீளமாக உள்ள திருவாய்மூரில் இருக்கும் வீதிகள் அழகிய ஊஞ்சல்கள் பலவற்றைக் காட்டும்; விடியற் காலத்தில் அந்த நீலோற்பல மலர்கள் இருட்டைக் காட்டிக் கொண்டு விளங்கும்; அந்த விடியற் கால வேளையில் உழவர்கள் நிலங்களை உழும்போது மாடுகளை ஒட்டும் சத்தத்தை அந்த ஊரில் கேட்கலாம்; பல வகையாகிய பாத்திரங்களை யும் அணிகலன்களையும் உயரமாக நிற்கும் திருவாய்மூரில் உள்ள திருமாளிகைகள் தோன்றச் செய்யும்; இவ்வாறு ஒரு வரம்பைக் காட்ட முடியாத பெரிய வளங்கள் அந்தத் திருவாய்மூரில் நிறைந்து விளங்கும். பாடல் வருமாறு:

' மலர்நீலம் வயல்காட்டும்;

மைஞ்ளுதிலம் மதிகாட்டும்; அலர்டுே மறுகாட்டும்

அணியூசல் பலகா ட்டும்; புலர்நீலம் இருள்காட்டும்;

பொழுதுழவர் ஒலிகாட்டும்: கலம்கீடு மனைகாட்டும்;

கரைகாட்டாப் பெருவளங்கள்.” மலர் நீலம் வயல்-அந்தத் திருவாய்மூரில் உள்ள வயல்கள் நீலோற்பல மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். காட்டும்காணுமாறு செய்யும். மை-மையைப் போன்ற கருமையான் களங்கத்தை நீலம் என்பது இங்கே கரிய நிறத்தைக் குறித் தது: நீல நிறக் காக்கை' என வருதலைக் காண்க. மதிசந்திரன். காட்டும்-தன்னிடத்தில் இருப்பதைக்காண்பிக்கும். அலர்-மலர்ச்சியைப் பெற்று முதல்நிலைத் தொழிற். பேயர். திற-தியாக இருக்கும். மறுகு-திருவாய்மூரில் உள்ள