பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 22%

என்று பாடியருளியதால் இந்தச் செய்தி விளங்கும். கவிக் காம நாயனாருடைய திருவவதாரத் தலமாகிய திருமங் கலம் இந்தத் திருப்புன்கூருக்கு அருகில் உள்ளது.

திருநாவுக்கரசு நாயனார் திருப்புன்கூரையும் திருநீே ரையும் சேர்த்துப் பாடியருளிய ஒரு திருத் தாண்டகம் வருமாறு: .# x . X- -

' பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்

பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத்

தூநெறிக்கும் தூநெறியாய் நின்றான் தன்னைத் திறமாய எத்திசையும் தானே ஆகித் .

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிறமாம் ஒளியானை நீடு ரானை

நீதனேன் என்னே நான் நினையா வாறே. * திருநீடூர்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் அருட்சோம நாதீசுவரர், கான நிர்த்த சங்கரர் என்பவை. அம்பிகையின் திருநாமங்கள் வேயுறு தோளியம்மை, அதி காந்தியம்மை என்பவை. தலவிருட்சம் மகிழ மரம். இது ஆனந்தத் தாண்டவ புரத்திலிருந்து தென் மேற்குத்திசையில் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. முனையடுவார் நாயனார். சிவபெருமானுடைய அடியவர்களுக்குத் திருவமுது படைத்து மகிழ்ந்து முத்தி பெற்ற தலம் இது ஊழிக் காலத்திலும் மறையாமல் இருக்கும் தலமாதலின் இதற்கு நீடூர் என்னும், பெய்ர் உண்ட்ாயிற்று. இந்திரன், சூரியன், சந்திரன் ஒரு நண்டு, காளி ஆகியவர்கள் வழிபட்ட தலம் இது. இஆற்இ வகுளாரணியம், மகிழாரணியம், மகிழவனம் எனவும் பெயர்கள் வழங்கும். . . . . . . . - . .

இதைப் பற்றிய ஒருபாகரம் வருமாறு

' காடில் ஆடிய கண்ணுதாைனைக் .