பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - பெரிய புராண விளக்கம்-6

கால னைக்கடிந் திட்டபிரானைப் பாடி ஆடும் பரிசே புரிந்தானைப்

பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத் தேடி மால்அயன் காண்பரி யானைச்

சித்த மும்தெளி வார்க்கெளி யானைக் கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர்க்

கூத்த னைப்பணி யாவிட வாமே. இந்த நாயனார் திருப்புன்கூரையும் திருநீடூரையும் சேர்த்துப் பாடியருளிய மற்றொரு திருத் தாண்டகம் வருமாறு:

  • கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்

கால்நிமிர்த்து நின்றுண்ணும் கையர் சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்

புள்ளுவரால் அகப்படா துய்யப் போந்தேன் செய்யெலாம் செழுங்கமலப் பழன வேலித்

திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடு ரானை

நீதனேன் என்னேநான் நினையா வாறே. ' திருக்குறுக்கை: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வீரட்டேசுவரர். அம்பிகை ஞானாம்பிகை. இது திரு அன்னியூரிலிருந்து வடமேற்குத் திசையில் 4 மைல் தூரத்தில் உள்ளது. இது அட்ட விரட்டத் தலங்களில் ஒன்று. காமனை வீரட்டேசு. வரர் எரித்ததைப் புலப்படுத்தும் தலம் இது. வேதாரணி யத் தல புராணத்தில் உள்ள சபைச் சருக்கத்தில் கூறப். பெற்ற சபைகளுக்குள் இந்தத் தலத்தில் உள்ள சபை: காமாங்கநாசனிசபை அல்லது சம்புவிநோதசபை' என வழங்கும். இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு:

ஆத்தமாம் அயனும் மாலும்

அன்றிகற் றொழிந்ததேவர்.

x *