பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 233

  • ஏன மருப்பினொடும் எழில் ஆமையும்

பூண்டு கந்து வான மதிள் அரணம் மலையேசிலை

யாவளைத்தான் ஊனமில் காழி தன்னுள்

உயர் ஞானசம் பந்தர்க்கன்று ஞானம் அருள் புரிந்தான்

நண்ணும் ஊர்நனி பள்ளியதே.' இந்தத் தலத்தைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: - -

  • முற்றுணை ஆயி னானை

மூவர்க்கு முதல்வன் தன்னைச் சொற்றுணை ஆயி னானைச்

சோதியை ஆதரித்து உற்றுணர்ந் துருகி ஊறி

உள்கசி வுடைய வர்க்கு நற்றுணை யாவர் போலும்

நனிபள்ளி அடிக ளாரே. ” பிறகு வரும் 190-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் ஓடுகின்ற நீரைக் கொண்ட பொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய இரண்டுக் கரைகளிலும் உள்ள பல சிவத்தலங்களையும் அடைந்து இடபத்தைத் துவசமாக உயர்த்தியவராகிய சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருச் செம்பொன் பள்ளிக்கு எழுந்நருளி அந்தச் சொர்ணபுரீசுவரரைத் துதித்து ஒரு திருப்பதிகத்தை அந்த தாயனார் பாடியருளி சோலைகளில் பலவகை மரங்கள் உயர்ந்து நிற்கும் மயிலாடுதுறை யாகிய மாயூரம், நீண்ட பொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றின் கரையில் விள்ங். கும் துருத்தி, வேள்விக்குடி, திரு எதிர் கொள்பாடி ஆகிய