பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 241

பிறைக்க பாலம் பெரும்புனல் ஆவடு துறைக்க வாவியோ டாடிய சுண்ணமே ' இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு:

- மாயிரு ஞாலம் எல்லாம்

மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல ஊரர்க் கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே. ' இந்த தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருநேரிசை வருமாறு:

மஞ்சனே மணியும் ஆனாய்

மரகதத் திரளும் ஆனாய் நெஞ்சுளே புகுந்து நின்று

நினைதரு நிகழ்வி னானே துஞ்சும்போ தாக வந்து

துணை எனக் காகி நின்று அஞ்சல்என் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே. " அந்த நாயனார் திருவாவடுதுறையைப் பற்றிப் பாடி யருளிய சந்த விருத்தங்கள் இப்போது கிடைக்கவில்லை. மறைந்துபோன் திருப்பதிகங்களில் அவையும் சேர்ந்து

இருக்கும் போலும்! * . . . . .

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வியாழக் குறிஇ சிப் பண்ணில் திருக்கழுமலத்தைப் பற்றிப் பாடியருளிய o திருத் தாளச்சதியே சந்தவிருத்தம் என்று கூறலாம். அந்தத் திருப்பதிகத்தில் வரும் முதற் பாசுரம் வருமாறு:

தி-22 - . . . . .