பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பெரிய புராண விளக்கம்-5

ப்:சந்தி. பலநாள்-பலதினங்கள்; ஒருமை பன்மை மயக்கம். தங்கி-அந்தத் திருவாவடு துறையில் அந்த நாயனார் தங்கிக் கொண்டிருந்து. ப்:சந்தி. புரிவுறு-தாம்செய்வதற்கு உரிய. கை-தம்முடைய திருக்கரங்களால்; ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. திருத்தொண்டு.உழவாரத் திருத் தொண்டினை. போற்றி-அந்த மாசிலாமணிஈசுவரரை வாழ்த்தி. செய்வார். வணங்கிப் புரிவாரானார். - ..

இந்தப் பாட்டில்குறிப்பிட்ட திருத்தாண்டகம் வருமாறு: நம்பனை நால்வேதம் கரைகண் டானை :

ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னை

கற்பகமாய் அடியார்கட் கருள் செய்வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளும் முத்தைத்

திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை அம்பொன்னை ஆவடுதண்டு ரையுள் மேய.

அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே.” இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய மற்றொரு திருத்தாண்டகம் வருமாறு:

4. திருவேஎன் செல்வமே தேனே வானோர்

செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க உருவேஎன் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவே என் கற்பகமே கண்ணே கண்ணிற்

கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய் வல்லினைநோய் அடையா வண்ணம்

ஆவகுதண் டுறையுறையும் அமரர்ஏறே. 䲁 # . . . . இந்தத் தலத்தைப்பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருக் குறுந்தொகை வருமாறு:

  • நிறைக்க லாவியள் அல்லளிந் நேரிழை . . . . . . .

மறைக்க சாவியன் அல்லனிம் மாதராஸ் -