பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்

மேவுதிருக் குறுந்தொகைகே ரிசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு பாவலர்செந் தமிழ்த்தொடையாற் பள்ளித் தாமம்

பலசாத்தி மிக்கெழுந்த பரிவி னோடும் பூவலயத் தவர்.பரவப் பலநாள் தங்கிப்

புரிவுறுகைத் திருத்தொண்டு போற்றிச் செய்வார்.” ஆடுவதண் டுறையாரை அடைந்துயந்தேன்’ என்றுஆடுவதண்டுறையாரை அடைந்துயந்தேன்’ எ ன த் தொடங்கி. அளவுஇல்-அளவு இல்லாத. இல் : கடைக் குறை. திருத்தாண்டகம்-திருத் தாண்டகம் ஒன்றை. முன்அந்த மாசிலாமணி ஈசுவரருடைய சந்நிதியில் நின்று கொண்டு. அருளிச் செய்து-அந்தத் திருநாவுக்கரசு நாயக னார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. மேவு தம். மிடம் விருப்பத்தோடு தோன்றிய. திருக்குறுந்தொகைதிருக்குறுந் தொகைகள் அடங்கிய ஒரு திருப்பதிகத்தையும் ஆகுபெயர்; ஒருமை பன்மை மயக்கம். நேரிசையும். திரு நேரிசைகள் அடங்கிய ஒரு திருப்பதிகத்தையும்; ஆகுபெயர். நேரிசை: ஒருமை பன்மை மயக்கம். சந்த விருத்தங்கள் ஆனவையும்-திருச்சந்த விருத்தங்கள் ஆனவற்றையும். வேறு. வேறு-வேறு வேறாக உள்ள். பா-பாசுரங்கள்; ஒருமை. பன்மை மயக்கம். அவர்-தம்முடைய திருவாயிலிருந்து மலரும். செந்தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த. த்:சந்தி. தொடையால்-தொடுத்த மாலையாகிய ஒரு திருப்பதிகத்தால். பள்ளித்தாமம் - திருப்பள்ளி எழுச்சியின் போது பாடியருளும் மாலைகளாகிய திருப்பதிகங்கள்;. உவமஆகுபெயர்.பல-பலவற்றை. சாத்தி-அந்த மாசிலாமணி ஈசுவரருக்கு அணிந்துவிட்டு. மிக்கு-மிகுதியாக உண்டாகி. எழுந்ததம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த, பரிவினோடும் - பக்தியோடும். பூவலயத்தவர் - இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள். வலயம்-மண்டலம்: ஒருமை பன்மை மயக்கம் பரவு-புகழ்ந்து பாராட்டுமாறு.