பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 243.

சூழ்ந்திருக்கும் திருப்பழையாறையை அந்த நாயனார் அடைந்து பிறகு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளிப் போய்ச் சேர்ந்தார். பாடல் வருமாறு:

எறிபுனல்பொன் மணிசிதறும் திரைநீர்ப் பொன்னி

இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி

வண்டமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்திப் பொறியரவம் புனைந்தாரைத் திருநாசேச்சுரத்துப்

. போற்றி அருந்தமிழ் மாலை புனைந்து போந்து ,奖 செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். ' எறி-அலைகளை வீசும். புனல்-தன்னிடம் ஒடும் நீர்,

மணி.மானிக்கங்களை; ஒருமை பன்மை மயக்கம். சிதறும்" சிதறி விழுமாறு புரியும். திரை-அலைகளில் உள்ள ஒருமை: பன்மை மயக்கம். நீர்-புனலைப் பெற்ற ப்:சந்தி. பொன்னிபொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய தென் கரையில் விளங்கும். இடைமருதை திருவிடை மருதூருக்கு; உருபு மயக்கம். ச்:சந்தி. சென்று-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி. எய்தி-அடைந் அன்பினோடுபக்தியோடு. மறி-மான்குட்டி. விரவு-தங்கியுள்ள. கரத் தாரை-திருக் கரத்தைப் பெற்ற மகாலிங்க மூர்த்தியை. ங்ைகி.பணிந்து விட்டு. வைகி-அந்தத் திருவிடை மருதூரில் தங்கிக்கொண்டிருந்து. வண்-சொற்சுவை, பொருட்சுவை. என்னும் வளப்பத்தைப் பெற்ற தமிழ்-செந்தமிழ் மொழி, யில் அமைந்த. ப்:சந்தி. பா-பாசுரங்கள் அடங்கிய ஒருமை, பன்மை மயக்கம். மாலை-மாலைகளாகிய திருப்பதிகங்கள், ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை மகிழ-அந்த மகா கிங்கமூர்த்தி மகிழ்ச்சியை அடைந்தருளுமாறு ச்சந்தி. சாத்தி-அவருக்கு அந்த நாயனார் அணிந்துவிட்டு. ப்:சந்தி, பொறி-புள்ளிகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம்,