பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பெரிய புராண விளக்கம்-6

அரவம்-பாம்புகளை; ஒருமை பன்மை மயக்கம். புனைந் தாரை - அணிந்தவராகிய நாகநாதேசுவரரை. த்:சந்தி. திருநாகேச்சுரத்து-அவர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி விருக்கும் திருநாகேச்சுரத்தில். ப்:சந்தி. போற்றி-அந்த ஈசுவரரை வாழ்த்தி வணங்கிவிட்டு. அரும்-அந்த நாயனார் அருமையாக விளங்கும். தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த, மாலை-மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை. புனைந்து. அந்த ஈசுவரருக்கு அணிந்து விட்டு. போந்துதிருநாசேச்சுரத்திலிருந்து அப்பால் எழுந்தருளி, செறி-செறிந் திருக்கும். வரை-நறுமணம் கமழும். நல்-நல்ல. மலர்மலர்கள் மலர்ந்திருக்கும் பல வகையாகிய மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை ம ய க் க ம். கசந்தி. சோலை-பூம்பொழில் சூழ்ந்திருக்கும். ப்:சந்தி. பழையாறு-திருப்பழையாற்றை. எய்தி-அடைந்து, த்:சந்தி. திருச்சத்தி முற்றத்தில்-திருச்சத்தி முற்றத்திற்கு உருபு மயக்கம். சென்று-அந்த நாயனார் எழுந்தருளி. சேர்ந்தார். அடைந்தார்.

திருவிடை மருதுார்: இது சோழ நாட் டி ல் காவிரியாற்றினுடைய தென்கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் மருதப்பஈசுவரர், மருதவாணர், மகாலிங்கேசுவரர், மகா, லிங்க மூர்த்தி என்பவை. அம்பிகை பெருநலமாமுலை தாயகி. தலவிருட்சம் மருதமரம். இது கும்பகோணத்துக்கு, ல்டகிழக்குத் திசையில் ஐந்து ம்ைல் தூரத்தில் உள்ளது. இதற்கு வடமொழியில் மத்யார்ஜுனம் என்று பெயர். இந்தத் தலத்தில் ஒடும் காவிரியாற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தில் நீராடுவது மிகவும் புண்ணியத்தைத் தரும் செயல் என்பர்.

இந்தக்கருத்தைத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். பாடியருளிய பின்வரும் பாசுரம் தெளிவுறுத்தும்