பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 247

களைச் செய்து முத்தி பெற்ற தலம் இது. உருத்திரர், உமையம்மை, விநாயகர், முருகப் பெருமான், திருமால், .பிரமதேவன் முதலியவர்கள் வழிபட்ட தலம் இது. மூகாம் பிகை சந்நிதி ஒன்று தனியாக இந்த ஆலயத்துக்குள் உள்ளது. மொனமாக இருந்து அந்த அம்பிகை தவம் புரிந்தமையால் மூகாம்பிகை என்ற திருநாமம் அவருக்கு உண்டாயிற்று. மூகம்.ஊமை. திருவிடை மருதூர்த் தெரு அழகு என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு:

' வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் - - வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவெய்தத் திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்தஇடை மருதிற் பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே. " இந்தத் , தலத்தைப்பற்றித் தக்கராகப் பண்ணில் திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: -

ஒடே கலன் உண்பதும் ஊரிடு பிச்சை காடே இடம் ஆவது கல்லால் நிழற்கீழ் வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந் தீடா வுறை கின்ற இடைமரு தீதோ. ” அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய குறிஞ்சிப்பண் அமைந்த திருஇருக்குக் குறள் ஒன்று வருமாறு:

தோடொர் காதினன், பாடும் மறையின்ன காடு பேணிநின், றாடும் மருதனே. ' இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் வியாழக் குேறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: * * : . . . . 'நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த -

படைம்ரு தழலெழ மழுவல் பகவன் புடைமருதினமுகில் வளமமர் பொதுளிய ... ... "...} இட்ைமரு தடையதம் இடர்கெடல் எவிதே.: