பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பெரிய புராண விளக்கம்

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் காக்கா: பண்ணில் பாடியருளிய பாசுரம் ஒன்று வருமாறு:

பொங்குநூல் மார்பினர்

பூதப்படையீர் பூங்கங்கை தங்கு செஞ்சடையினர்

சாமவேதம் ஒதினர் எங்கும்.எழிலார் மறையோர்கள்

முறையால்ஏத்த இடைமருதில் மங்குல்தோய் கோயிலே

கோயிலாக மகிழ்ந்தீரே. ' இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார். தக்கேசிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

கழுதை குங்குமம் தான்சுமந்தெய்த்தாற்

கைப்பர் பாழ்புக மற்றது போலப் பழுது நான் உழன் றுந்தடு மாறிப்

படுசு ழத்தலைப் பட்டனன் எந்தாய் அமுது இருந் தென்செய்தி மனனே அங்கணா அரனே என மாட்டா கழுதை யேனுக்கோர் உய்வதை அருளாழ்

இடைமருதுறை எந்தை பிரானே. திருநாகேச்சுரம்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம்இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் சண்பகாரணியேசுவரர், நாகநாதேசுவரர் என்பவை. அம்பிகை குன்ற முலை நாயகி. இது கும்பகோணத்திற்குக் கிழக்குத் திசையில் 4 மைல் தூரத்தில் உள்ளது. இதற்குச் சண்பகாரணியம் என்னும் பெயரும் உண்டு. பெரிய புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் மிக்க அபிமானம் வைத்திருந்த தலம் இது. அதனால் அவர் தம்முடைய திருவவதாரத் தலமாகிய குன்றத்தூரில் இருக்கோயில் ஒன் றைக் கட்டுவித்து அதற்குத் திரு நாகேச்சம் என்று பெயர் அடிைத்தார் ஆவருடைய திருவுருவிழம் இந்த ஆலயத்தில்