பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 249.

இருக்கிறது. தீர்த்தம் சூரிய புஷ்கரிணி. சங்கநிதி, பதுமநிதி, மகாசாஸ்தா, ஆகியவர்களுடைய விக்கிரகங்களும் இந்த ஆலயத்தில் உள்ளன. சுந்தர மூர்த்தி நாயனாருடைய திரு. உருவமும் அவருக்குஅருகில் பரவை நாச்சியார் திருஉருவமும் உள்ளன. சந்திரன், சூரியன், ஐந்து தலைநாகம் ஆகியவர்கள் வழிபட்ட தலம் இது. ஞாயிறும் திங்களும் கூடிவந்தாடிடும் நாகேச்சுரம்' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு:

  • சந்தி ரனொடு சூரியர் தாமுடன்

வந்து சீர்வழி பாடுகள் செய்தபின் ஐந்தலை யரவின் பணி கொண்டருள் மைந்தர் போன்மணி நாகேச் சுரவரே. ' இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப்பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : -

  • பொன்நேர்தரு மேனிய னேபுரியும்

மின்நேர்சடை யாய்விரை காவிரியின் நன்னீர்வயல் நாகேச் சரநகரின் மன்னே என வல்லினை மாயந்தறுமே. அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிச் செவ்வழிப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுர வருமாறு:

தழைகொள் சந்தும் அகிலும்

மயிற்பீலியும் சாதியின் பழமும் உந்திப் புனல்பாய்

பழங்காவிரித் தென்கரை தழுவில் வானோர் தொழநல்கு

ர்ேமல்கு நாகேச்சரத் தழகர் பாதம் தொழுதேத்த வல்லார்க் கழகாகுமே. .ே இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: .