பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரிய புராண விளக்கம்-.ே

மணி வயிறு: 'மன்னு புகழ்க் கெளசலை தன் மன்னி வயிறு வாய்த்தவனே.’’ என்று குலசேகரப் பெருமாள் பாடியருளியதைக் காண்க. '.

பெண்மணிக்குத் திருமகள் உவமை: 'திருத்திகழ் மலைச் சிறுமி.’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'பெருந்திரு இமவான் பெற்ற பெண் கொடி.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'திருவனார் பணிந்தேத்தும் திகழ் திருவாஞ்சியத் துறையும் ஒருவனார்.’’ என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், திருவின கருக்குழி.' என்று திரு. மூலரும், எஞ்சாத திருவொடும் பொலியும் ஒரு பால்.’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும், திருமகள் என்ன நின்ற தேவியார்., "பதும நற்றிருவின் மிக்கார்.,

திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபமெனும் ஒரு மகளை., 'பெறலரும் திருவினாளை., 'அம்புய மல. ராள் போல்வாள்.', 'செங்கமலத் திரு மடந்தை கன்னி நாடாள்.' என்று சேக்கிழாரும், திருவின் வடிவொக்கும் தேவகி', 'ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்.'" * என்று: பொயாழ்வாரும், "தவந்தீர் மருங்கில் திருமகள் போல... பைந்தொடி,, 'திருமகள் போலக் கோமகள் போதும்., "திருமகள் போல.. நோற்ற ப்ாவாய்.”, பூவிற்றிருந்த திரு. மகள் போல... வாசவத்தை.', 'தாமரைத் தடாகத் துறை. யும் மாசில் மடமகள் மருங்கின் வடிவாய்.', 'இயற்கைத் திருமகள் இவள்.', 'திருமகளாயினும் உருவினும் உணர்வி லும் ஒப்புமையாற்றாத் தெரியிழை அல்குல் தேமொழிக் குறுமகள்." (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், *மகளிருள் திருவனாளை.', செய்பூந்தவி சின் மிசையல்லது. சேறலில்லா.' (சீவக சிந்தாமணி, 840, 2338) என்று திருத். தக்க தேவரும், :பாடகச் செம்பதும மலர்ப் பாவையர். ”, 'அவனித் திருவும். (திருவவதாரப் படலம், 32. 129), 'பூமட மயிலினைப் பொருவும் பொற்பொடும்." (தாடகை