பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 253

சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்

துறையும் சிவக்கொழுந்தே. ’’ பிறகு வரும் 193-ம் கவியின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளி அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தச் சிவத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த சிவக்கொழுந்தீசுவரரை இமய மலை யரசனுடைய புதல்வியாகிய பெரிய நாயகியினுடைய திருவுள்ளத்தில் உள்ள விருப்பம் பொருந்தும் பூசையை ஏற்றுக் கொண்டருளி எந்தக் காலத்திலும் தம்முடைய பக்தர்களுக்கு இனிமையானவன் ஆகிய அந்தச் சிவக்கொழுந் தீசுவரண்ை அந்த நாயனார் வணங்கி விட்டு தம்முடைய இயல்புக்கு ஏற்ற பல திருப்பணிகளை அந்த சிவக்கொழுந்தீசு வரருடைய ஆலயத்தினுடைய முற்றத்தை அடைந்து புரிந்து செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப் பதிக்ங்களையும் அந்தச் சிவக்கொழுந்தீசுவரருக்கு அந்த் நாயனார் அணிபீவரானார். பாடல் வருமாறு:

சென்று சேர்ந்து திருச்சத்திமுற்றத்

திருந்த சிவக்கொழுந்தைக் குன்ற மகள்தன் மனக்காதல்

குலவும் பூசை கொண்டருளும் என்றும் இனிய பெருமானை :

இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் முன்றில் அணைந்து செய்துதமிழ்

மொழிமா லைகளும் சாத்துவார். - - சென்று-அவ்வாறு திருச்சத்தி முற்றத்திற்கு எழுந்தருளி. சேர்ந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைந்து. திருச்சத்தி முற்றத்து-திருச்சத்தி முற்றத்தில். இருந்த-திருக் கோயில் கொண்டு எழுத்தருளியிருந்த சிவக் கொழுந்தைசிவக்கொழுந்தீசுவரரை க்சந்தி: குன்ற-இமயமலை அரச திண்ைமயக்கம். மகள்தன் புதல்வியாகிய பெரிய : للاسsp160)L | நாயகியினுடைய் தன்:அண்சநில்ை மனந்திருவுள்ளத்தில்

  • *