பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பெரிய புராண விளக்கம்-இ

ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே, ' திருச் சத்தி முற்றம்: இந்தத் தலம் சத்தி முத்தம் எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள் சிவக்கொழுந்தீசுவரர், சத்திவனேசுவரர் என்பவை. அம்பிகை பெரிய நாயகி அம்மை. தீர்த்தம் சூவு தீர்த்தம். இது கும்பகோணத்திற்குத் தென்மேற்குத் திசை ஆயில் 4-மைல் தூரத்தில் உள்ளது. பட்டீச்சுரம் இதனுடன் சேர்ந்து இதற்குத் தெற்குத் திசையில் உள்ளது. இரண்டு தலங்களும் ஒரே ஊரைப் போலத் தோன்றுகின்றன. பெரிய நாயகி அம்மை சிவக்கொழுந்தீசுவரரைத் தழுவிக்கொட்டு முத்தம் கொடுத்தருளிய தலம் இது. அந்தக் கோலத்தோடு உள்ள திருவுருவம் இந்த ஆலயத்தில் உள்ளது.

மட்டார் குழலிமலைமகள் பூசை மகிழ்ந்தருளும் சிட்டா திருச்சத்தி முத்தத்துறையும் . . . . சிவக்கொழுந்தே. ” என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. -

திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: ÷' ኍ - - " கோவாய்முடுகி அடுதிறற் சுற்றம்கு மைப்ப தன்முன்

பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடின் மூவா முழுப்பழி மூடும்கண்டாய் முழங்கும் தழற்கைத் தேவா திருச்சுத்தி முத்தத்துறையும் சிவக்கொழுந்தே." இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடி யருளிய மற்றொரு பாசுரம் வருமாறு: - - ' காய்ந்தாய் அனங்கன் உடலம்

பொடிபடக் காலனைமுன் பாய்ந்த்ாய் உயிர்செகப் பாதம்

பணியார்தம் பல்பிறவி ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் கருளாய்டின் அன்பர்சிந்தை