பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 25t

அளைந்துகுளிர் மாதவிமேல் சிறையணி வண்டுகள்சேர்

திருநாகேச் சரத்தாளே. '

திருப்பழையாறு: இந்தத் தலம் பழையாறை வடதளி' எனவும் வழங்கும். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சோமேசுவரர். அம்பிகை சோமகலா நாயகி. தீர்த்தம் சோம தீர்த்தம். இது பழையாறை என்றும் வடதளி: என்றும் இரண்டு சிவத்தலங்களாக உள்ளன . பம்பைப் படை என்னும் ஊரிலிருந்து தெற்குத் திசையில் உள்ள திருமலை ராயன் ஆற்றைக் கடந்து கால் மைல் சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். இந்த இரண்டு சிவத்தலங்களையும் ஒரே பதிகத்தில் சேர்த்து நாயன்மார்கள் பாடியருளியிருக் கிறார்கள். வடதளியில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானாருடைய திருநாமம் தருமபுரீசுவரர் என்பது. அம்பிகை விமலநாயகி. இந்தத் தலத்தில் காமதேனுவினுடைய புதல்வியாகிய விமலிஎன்பவள் வழிபட்டிருக்கிறாள். ஆலயம் ஒரு மேட்டின் மேல் உள்ளது. இங்கே சிவபெருமான், அம்பிகை என்னும் இருவருடைய விக்கிரகங்களை அல்லாமல் வேறு விக்கிரகம் ஒன்றும் இல்லை. இந்த ஆலயத்துக்கு அருகில் துறையூர்ச் சிவப்பிரகாச சுவாமிகளுடைய சமாதிக் கோயில் இருக்கிறது. பழையாறை சந்திரன் வழிபட்ட தலம். அமர் நீதி நாயனார் வாழ்ந்திருந்த தலம்.இது. காமதேனுவி னுடைய புதல்வியர்களுக்குள் பட்டிவழிபட்டது பட்டீச்சுரம். விமலி வழிபட்டது பழையாறை வடதளி. சயளி வழிபட்டது திருமேற்றளி. இங்கே எழுந்தருளியிருப்பவர் - கைலாசநாத்ர். அம்பிகை சபளநாயகி. நந்தினி பூசித்த சிவத்தலம் முழையூர். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பரசுநாதேசுவரர். அம்பிகை ஞானாம்பிகை. இந்தத் தலத் தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: . . . . . . - : நீதி யைக்கெட நின்றம் ணேயுனும்

சாதி யைக்கெடுமாசெய்த சங்கர்ன்