பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.திருநாவுக்கரசு நாயனார் புராணம் 279.

கரசு நாயனாரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு வலமாக வந்து அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை திருவமுது செய்தருளும் வண்ணம் வேண்டிக் கொள்வாராகி சிவபெருமானாரால் ஆட்கொள்ளப் பெற்ற பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தைப் புரிந்த திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய திருவுள்ளச் சம்மதத்தை அடையும் பாக்கி யத்தை அந்த அப்பூதியடிகள் நாயனார் அடைந்தார். ’ :பாடல் வருமாறு:

மற்றவரும் மனம்மகிழ்ந்து

மனைவியார் மைந்தர்பெரும் சுற்றமுடன் களிகூரத் - தொழுதெழுந்து சூழ்ந்துமொழிக் கொற்றவரை அமுதுசெயக்

குறைகொள்வார் இறைகொள்ளப் பெற்றபெரும் தவத்தொண்டர்

திருவுள்ளம் பெறப்பெற்றார்.' மற்று: அசை நிலை. அவரும்-அந்த அப்பூதியடிகள் நாயனாரும். மனம்-தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்துமகிழ்ச்சியை அடைந்து, மனைவியார்-தம்முடைய பத்தினி யாரும், மைந்தர்-புதல் வரும் ஆகியவர்காளாடும். பெரும்பெருகியிருக்கும். சுற்றமுடன்-உறவினர்களோடும்; திணை மயக்கம். களி-ஆனந்தம். சுர-மிகுதியாக உண்டாக: த்:சந்தி. தொழுது-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து- பிறகு தரையி லிருந்து யாவரும் எழுந்து நின்று கொண்டு. சூழ்ந்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை வலமாக வந்து பிரதட்சிணம் செய்து. மொழிக் கொற்றவரை-திருநாவக்கரசு நாயனாரை. அமுதுசெய-திருவமுது செய்தருளுமறு: செய: இடைக்குறை, -க்:சந்தி. குறை கொள்வார்-வேண்டிக் கொள்ளுபவர்கள் ஆகி; முற்றெச்சம். இறை கொள்ள-திருவதிகை விரட்டா