பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பெரிய புராண விளக்கம்-5

" அந்தணரின் மேம்பட்ட

அப்பூதி அடிகளார்

தந்தனய ருடன்சாலை

கூவல்குளம் தருதண்ணீர்ப்

பந்தர்பல ஆண்டஅர

செனும்பெயரால் பண்ணினமை

வந்தணைந்த வாகீசர்

கேட்டவர்தம் மனைகண்ண. ’’

இந்தப் பாடல் குளகம். அந்தணரின்-வேதியர்களுக்குள்; ஒருமை பன்மை மயக்கம். மேம்பட்ட-மேம்பாட்டை அடைந்த அப்பூதி அடிகளார்.அப்பூதி அடிகள் நாயனார். தம்-தம்முடைய தனயருடன்-புதல்வரோடு. சாலை-வழிப் போவார் நடக்கும் சாலை. கூவல்-கிணறு. குளம்தரு-குளம் தாகம் அடைந்தவர்கள் தங்களுடைய தாகத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டுக் குளிர்ச்சியைப் பெற்ற நீரை வழங்கும். தண்ணிர்ப் பந்தல் பல-தண்ணிர்ப் பந்தல் முதலிய பல அம்ைப்புகளுக்கும். ஆண்ட அரசு-திருவதிகை வீரட் டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாய னார். அரசு: திணை மயக்கம். எனும்-என்னும், இடைக் குறை. பெயரால்-திருநாமத்தோடு; உருபு மயக்கம். பண்ணினமை-அமைத்த பான்மையை வந்து-திங்களுருக்கு எழுந்தருளி. அணைந்த-அடைந்த வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார். கேட்டு-அந்தத்திங்களுரில் வாழும் மக்கள் கூறக் கேள்விப்பட்டு. அவர்தம்-அந்த அப்பூதி யடிகள் நாயனாருடைய. தம்: அசைநிலை. மனை-திரு மாளிகைக்கு, நண்ண-எழுந்தருள. - -

பிறகு உள்ள 202ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த அப்பூதி அடிகள் நாயனாரும் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து தம்முடைய பத்தினி யாரும், புதல்வரும், ஆகியவர்களோடும் பெருகியிருக்கும் உறவினர்களோடும் ஆனந்தம் மிகுதியாக அந்தத் திருநாவுக்