பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 277.

அப்பதியை-அந்தச் சிவத்தலமாகிய திருப்பழனத்தை. ச்:சந்தி. சூழ்ந்த-சுற்றியுள்ள. திருப்பதியில்-அழ்கிய பல சிவத்தலங்களில்: ஒருமை பன்மை மயக்கம், அரனார்ஹரனாராகிய சிவபெருமானார். அரன்-சங்காரம் செய் தருள்பவன். மகிழும்.மகிழ்ச்சியை அடைந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். ஒப்பு-தங்களுக்குச் சமான மாக. அரிய-வேறு எதையும்கூறுவதற்கு அருமையாக உள்ள இ தானங்கள்-சிலத்தலங்களுக்கு எழுந்தருளி. உள்-தம்முடைய திருவுள்ளத்தில். உருகி.பக்தியினால் உருக்கத்தை அடைந்துப்:சந்தி, பணிந்து-அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு. அணைவார்-மேலே எழுந்தருளுபவராகி; முற்றெச் சம். மெய்-உண்மையாகிய. ப்:சந்தி. பொருள்-பரம் பொரு ளாகிய சிவபெருமானை. தேர்-அறிந்து தேர்ச்சி பெற்ற. நாவினுக்கு வேந்தர்-திருநாவுக்கரசு நாயனார். தாம்; அசை நிலை. செப்பரும்-கூறுவதற்கு அருமையாக இருக்கும். சீர்சீர்த்தியைப் பெற்ற. அப்பூதி அடிகளார்.அப்பூதி அடிகள் நாயனார். திங்களுர்-தம்முடைய வாழ்க்கையை நடத்தும் திங்களுரை. மேவினார்.அந்த நாயனார் அடைந்தார். -

பிறகு வரும் 201-ஆம் சுவியின் கருத்து வருமாறு:

வேதியர்களுக்குள் மேம்பாட்டை அடைந்த அப்பூதி அடிகள் நாயனார் தம்முடைய புதல்வரோடு, நடக்கும் சாலை, கிணறு, குளம், வருகிறவர்களுக்குத் தாகம் தீர்த்துக் கொள்ளுமாறு நீரை வழங்கும் தண்ணீர்ப் பந்தல் ஆகிய வற்றுக்குத் திருவதிகை விரட்டானேசுவரர் தடுத்து ஆட் கொண்ட திருநாவுக்கரசு நாயனார் என்னும் திருநாமத் தோடு அமைத்த பான்மையை அந்தத் திங்களுருக்கு எழுந் தருளி அடைந்த வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் - கேட்டுவிட்டு அந்த அப்பூதியடிகள் நாயனாருடைய

திருமாளிகைக்கு எழுந்தருள பாடல் வருமாறு :