பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 . பெரிய புராண விளக்கம்-6

' கண்மேற் கண்ணும் சடைமேற் பிறையும்

உடையார் காலனைப் புண்ணா றுதிரம் எதிரா றோடப்

பொன்றப் புறந்தாளால் எண்ணா துதைத்த எந்தை பெருமான்

இமவான் மகளோடும் பண்ணார் களிவண் டற்ைபூஞ் சோலைப்

பழன நகராரே...' . அடுத்து வரும் 200-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தச் சிவத்தலமாகிய திருப்பழனத்தைச் சுற்றி உள்ள பல சிவத்தலங்களில் ஹரனாராகிய சிவபெருமானார் மகிழ்ந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தங்க ளுக்குச் சமானம் கூறுவதற்கு அரியவையாக உள்ள சிவத் தலங்களுக்கு எழுந்தருளித் தம்முடைய திருவுள்ளத்தில் பக்தி யினால் உருக்கத்தை அடைந்து அந்தத் தலங்களில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு மேலே எழுந்தருள்பவராகி உண்மையான பரம்பொருளைத் தெரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்ற அந்தத் திருநாவுக்கரசர் கூறுவதற்கு அருமையாக இருக்கும் சீர்த்தியைப் பெற்ற அப்பூதி அடிகள் நாயனார் தம்முடைய வாழ்க்கையை நடத்தும் திங்களுரை அடைந்தார். பாடல் வருமாறு:

" அப்பதியைச் சூழ்ந்ததிருப் பதியில்அர னார்மகிழும் ஒப்பரிய தானங்கள் x உள்ளுருகிப் பணிந்தணைவார் மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு

வேந்தர்தாம் மேவினார் - செப்பரும் சீர் அப்பூதி

அடிகளார் திங்களுர்."