பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் JTTSTd - 28蕙

இந்தப் பாடல் குளகம். காண்-அந்த அப்பூதியடிகள் நாயனார் முன்னால் திருநாவுக்கரசு நாயனாரைப் பார்க்கும். தகைமை-பான்மை. இன்றியும்-இல்லா விட்டாலும், முன்அவரைப் பார்ப்பதற்கு முன்பே. கலந்த-தம்முடைய திரு வுள்ளத்திற் சேர்ந்திருந்த பெரும்-பெருகி எழும். கேண்மை யினார்பூண்ட- அப்பூதியடிகள் நாயனார் தன்னுடைய திருவுள்ளத்தில் பக்தியை உடையவராக. பெரும்-பெருகி. எழும். காதலுடன்-விருப்பத்தோடு. போனகமும்-பாற் சோற்றையும். கறியமுதும்-பல வகையான கறியமுது களையும்; ஒருமை பன்மை மயக்கம், அவையாவன: வேகவைத்த பூசணிக்காய், பறங்கிக் காய், வெள்ளரிக் காய், கருணைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, வெண்டைக் காய், வாழைக்காய், கொத்தவரங் காய், கத்தரிக்காய், முள்ளுக் கத்தரிக்காய், புடலங்காய், அவரைக்காய், வாளவரங்காய், முருங்கைக்காய் முதலியவை. வேண்டுவன-அந்த நாயனார் திருவ்முது செய்வதற்கு வேண்டிய பொருள்களை; அவை: யாவன: ஆசனப்பலகை, நுனி வாழை இலை, தண்ணீர்ப் பாத்திரம், கை துடைத்துக் கொள்ளும் துணி, வாயலம்ப நீர், கால் அலம்ப நீர் முதலியவை. வெவ்வேறு-வேறு வேறா கிய. விதங்கள்-வகைகளை. பெற-அந்த நாயனார் பெறு: மாறு. விருப்பினால்-விருப்பத்தோடு; உருபு மயக்கம். ஆண்ட அரசு-திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட். கொண்ட திருநாவுக்கரசு நாயனார். அரசு:திணை மயக்கம். அமுது செய-திருவமுது செய்யும் பொருட்டு. செய: இடைக் குறை. த்:சந்தி. திரு-அழகிய அமுதுஆம்படி-அமுதத்தைப் போல ஆகுமாறு. அமைத்து-எல்லாவற்றையும் அந்த அப் பூதியடிகள் நாயனார் சித்தம் செய்து விட்டு. -

பிறகு வரும் 204-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளும் பொருட்டு அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய பெரு. மையைப் பெற்ற திருநாமமாகிய திருநாவுக்கரசு என்பதை.