பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்-5

வைத்த அந்தத் தம்முடைய முதல் மைந்தனை அழைத்து வந்து பக்தி வழங்கும் மெம்யறிவைப் பெற்ற அழகிய வேதிய ராகிய அந்த அப்பூதியடிகள் நாயனார் தம்முடைய திரு மாளிகைக்குப் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் வளப்பத் தோடு வளர்ந்து நின்ற ஒரு வாழை மரத்தில் உள்ள பச்சை நிறத்தைப் பெற்ற நரம்பைக் கொண்ட குருத்திலையை அறுத்துக் கொண்டு வருமாறு அவனைத் தனியாக அனுப்பி னார். பாடல் வருமாறு: -

  • திருநாவுக்கர சமுது செய்தருள மற்றவர்தம்

பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்தன்பு - தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக் குருநாளக் குருத்தரிந்து கொண்டுவரத் தணிவிட்டார். " திருநாவுக்கரசு-திருநாவுக்கரசு நாயனார்: திணை மயக் கம். அமுது செய்தருள திருவமுது செய்தருளும் பொருட்டு. மற்று: அசைநிலை. அவர்தம்-அந்தத் திருநாவுக்கரசு நாய னாருடைய தம்: அசைநிலை. பெரு-பெருமையைப் பெற்ற. தாமம்-திருநாமமாகிய திருநாவுக்கரசு என்பதை. . சாத்தியஅலங்காரமாக எண்ணி வைத்த அப்பிள்ளைதனை-அந்தத் தம்முடைய முதற் புதல்வனை; தன்:அசைநிலை. அழைத்துஅழைத்துக் கொண்டு வந்து. அன்பு-பக்தி. தரு-வழங்கும். ஞான-மெய்யறிவைப் பெற்று. இறைவனிடம் பக்தியைப் பூண்டமையால் அவருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. த்:சந்தி. திரு-அழகிய; "செல்வத்தைப் பெற்ற எனலும் ஆம். மறையோர்-வேதியராகிய அந்த அப்பூதியடிகள் நாய னார். தண்டலையின்-தம்முடைய திருமாளிகைக்குப் பின் புறம் உள்ள தோட்டத்தில், வண்-வளப்பத்தோடு வளர்ந்து நின்ற, கதலி-ஒரு வாழை மரத்தில் உள்ள. க்சந்தி குருபச்சைநிறத்தைப் பெற்ற. நாள-நரம்பைக் கொண்ட: இது வாழை இலையின் நடுவில் இருப்பது. க்:சந்தி, குருத்து-குருத் திலையை. அரிந்து-அறுத்து. கொண்டுவர-அதை எடுத்துக்