பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. பெரிய புராண விளக்கம் - இ.

திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைக் கொண்டவனும் அப்பூதியடிகள் நாயனாருடைய முதற் புதல்வனும் ஆகிய அந்தச் சிறுவனும். விரைந்து-வேகமாகச் சென்று. எய்திஅந்தத் தோட்டத்தை அடைந்து. அம்மருங்கு-அந்தப் பக்கத் தில். தாழாது- சிறிதேனும் தாமதம் செய்யாமல், ஏ:அசை நிலை. பூம்-பூவைப் பெற்ற, கதலி-ஒரு வாழை மரத்தில் உள்ள. க்:சந்தி. குருத்து-குருத்திலையை. அரிய-அறுக்க,

ப்:சந்தி. புகும்-தொடங்கும். அளவில்-சமயத்தில். ஒரு. நாகம்-ஒரு நாகப்பாம்பு. தீங்கு-அவனைக் கடித்துத் துன்பத்தை. இழைக்க-உண்டாக்க. அது-அந்தத்துன்பத்தை. பேணான்-சிறிதேனும் சட்டை செய்யாதவனாகி; முற்றெச் சம். திருவமுது செய்தருள-திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளும் பொருட்டு. ஒங்கு-அந்த வாழை, மரத்தில் உயரத்தில் இருந்த, கதலி-வாழை மரத்தில் உள்ள. க்:சந்தி. குருத்து-குருத்திலையை, க்:சந்தி. .ெ கா எண் டுஅறுத்து அதை எடுத்துக் கொண்டு. ஒல்லை-விரை. வில். வந்து-திருநாவுக்கரசு நாயனார் அமர்ந்திருந்த இடத் திற்கு வந்து. அணைந்தான்-சேர்ந்தான். -

பிறகு வரும் 206-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்த நாகப்பாம்பு தன்னைக் கடித்ததனால் கெட்ட நஞ்சு தன்னுடைய தலையின்மேல் ஏறிக் கொள்ள அதனால் தன்னுடைய திருவுள்ளத்தில் சுழற்சியை அடைந்து அந்தத் திருநாவுக்கரசு என்னும் சிறுவன் செழுமையாக உள்ள வாழைக் குருத்திலையை தன்னுடைய அன்னையாருடைய கையினில் கொடுத்து விட்டுத் தளர்ச்சியை அடைந்து தன்னை நெருப்பைப் போன்ற நஞ்சைக்கக்கும் நாகப்பாம்பு கடித்து உண்டாகிய விதத்தை கூறாதவனாகித் தரையில் அவன் விழ அதைப் பார்த்து, நாங்கள் கெட்டு ஒழிந்து விட்டோம்; பரிசுத்தராகிய திருநாவுக்கரசு நாயனார் இந்தத் திருமாளிகையில் திருவமுதுபுரிந்தருள ஆரம்பிக்கமாட்டார்" என எண்ணி அந்தத் திருநாவுக்கரசு என்னும்,சிறுவனுடைய,